அஹதிய்யா ஆசிரியர்களுக்கு 15வது பயிற்சி செயலமர்வு...!

த்திய மாகாண முதலமைச்சரும் முஸ்லிம் கலாசார, கல்வி விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சருமான சரத் ஏக்கநாயக்கவின் ஆலோசனையின் கீழ் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் மத்திய மாகாண அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சி செயயலமர்வு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கண்டியில் நடைபெறும்.

இதில் கண்டி> மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 300 அஹதிய்யா ஆசிரியர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. 

பங்குபற்றும் ஆசிரியர்களுக்கு உணவு காகிதாதிகள் வழங்கப்படுவதுடன் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழும் வழங்கப்படவுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சரின் முஸ்லிம் கலாசார விவகார இணைப்பதிகாரி ரஷீத்.எம்.றியாழ் தெரிவித்தார். 

இந்த செயலமர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய அஹதிய்யா பாடசாலைகள் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ள rasheedmriyal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடனோ 0777 798898 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளமுடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -