எஸ்.அஷ்ரப்கான்-
சீனாவில் நடைபெற இருக்கின்ற சர்வதேச கராத்தே போட்டிக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களான யு.எல்.எம்.ஸறுஸ், எம்.என்.எம். நிஷாட் அலி ஆகிய இரு மாணவர்களும் தெரிவாகியுள்ளனர்.
எதிர்வரும் 2016 ஜூலை மாதம் 16 தொடக்கம் 22 ஆம் திகதி வரை சர்வதேச கராத்தே போட்டி சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நடைபெற உள்ளது. அப்போட்டியில் கலந்துகொள்ளும் இலங்கை வீரர்களை தெரிவு செய்யும் தெரிவு போட்டி இன்று (03.06.2016) கொழும்பு விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இருவர் தெரிவாகி அம்பாரை மாவட்டத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
குறித்த மாணவர்களுடன் கராத்தே பயிற்றுவிப்பாளர் முஹம்மத் இக்பால் ஆகியோரையும் காணலாம்.