கல்முனை றினோன் விளையாட்டுக்கழகம் நடாத்திவந்த பறக்கத் ஞாபகார்த்த கிண்ணம்-2016 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (2016.06.05) வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
றினோன் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் றிஷாட் சரீப் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விறுதிப் போட்டியில் கல்முனையின் முன்னணி கழகங்களான றினோன் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து கல்முனை லெஜன்ட் விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது.
இப்போட்டிக்கு பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் எம்.சீ.எம்.பைஸால் காசீம் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ. றஸாக் (ஜவாத்) அவர்களும், விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டப்ளியூ.ஏ. கப்பார், கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ரீ.சரவாநன்தன் ஆகியோர் உட்பட விளையாட்டுக்கழகங்களின் தலைவர்கள் மற்றும் வர்த்தகர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.