2 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பு...!

க.கிஷாந்தன்-
ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை மெதவத்த பகுதியில் 1995ஆம் ஆண்டு 01 மாதம் 26ம் திகதி இடம்பெற்ற ஒருவரின் கொலையுடன் தொடா்புடைய 2 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி ஆச்சாரி சுமுது பிரேமசந்திர 30.06.2016 அன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

1995ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து நடத்திய விசாரணைகளின் பின்னரே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலையுடன் தொடர்புடைய 2 பேர் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலையுடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்களான இராகலை மெதவத்த பகுதியை சேர்ந்த அசோக பத்திரண, விசோகுமாரி விக்கிரமசிங்க ஆகிய இரண்டு பேருக்கும் 6 மாதம் கடுங்காவல் சிறைதண்டனையுடன், மரண தண்டனை வழங்கி தீர்பளிக்கப்பட்டது.

மேற்படி சந்தேக நபா்கள் மெதவத்த பகுதியில் உள்ள சோமசிறி என்பவரை தனிப்பட்ட பிரச்சினை காரணமாக கொலை செய்துள்ளனர்.

இதனாலேயே இரண்டு சந்தேக நபா்களுக்கு 6 மாதம் கடுங்காவல் சிறைதண்டனையுடன், மரணதண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலைசெய்யப்பட்ட சோமசிறி என்பவர் மரண தண்டனை விதிக்கப்பட்ட விசோகுமாரி விக்கிரமசிங்கவின் தந்தை என்பது குறிப்பிடதக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -