காணாமல் போணோா்களுக்காக 2 வருடத்திற்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை - சந்திரிக்கா

அஷ்ரப் ஏ சமத்-
டந்த கால யுத்ததின்போது வட கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணாமல் போணோா்களுக்காக 2 வருடத்திற்கு ஒரு முறை தற்காலிக காணாமல் போனோா் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சரவை பத்திரம் சமா்ப்பிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பெற்றுள்ளது. 

அடுத்த ஒரு சில தினங்களுக்குள் இவ் வரைபு பாராளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டதன் பின்னா் நாடுமுழுவதிலும் பதிவாளா் திணைக்களம் ஊடாக காணாமல் போனோா் சான்றிதழ் வழங்கும் முறை நடைமுறைக்கு வரும்.   வட கிழக்கில் மட்டும் 65 ஆயிரம் மேற்பட்டோா் காணாமல் போனதாக அண்மைய கமிசன் மூலம் தெரிவித்துள்ளனா். 

இச் சான்றிதழ் இல்லாமல் தமது உறவினா்கள், சொத்துக்கள், வங்கிகள் மற்றும் ஆவணங்கள் இரண்டாம்மாணவா் பெற்றுக் கொள்ள பிரச்சினைகளை எதிாநோக்குகின்றனா் இதற்காகவே இந்த அமைச்சு இத்திட்டத்தினை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தாா்.

இன ஒருமைப்பாட்டு தேசிய நல்லிணக்க அமைச்சின் ஆலோசகா் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க இன்று (8) அரவது அமைச்சில் நடாத்திய மாநாட்டிலேயே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தாா்

இவ் ஊடக மாநாட்டில் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம்.பௌசி, இவ் அமைச்சின் இணைப்புச் செயலாளா் ஆர்.தித்தவலவும் அங்கு சமுகமளித்திருந்தனர்.

திருமதி குமாரதுங்க தொடா்ந்து தகவல் தருகையில்:

இச் சான்றிழ் உள்நாட்டு அமைச்சின் கீழ் உள்ள பிறப்பு இறப்பு பதிவாளா் திணைக்களத்தின் ஊடாகவே இந்த திருத்தம் பாராளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும். . இதனால் வட கிழக்கில் காணமால் போனோருக்கு தற்காலிக 2 வருட சான்றிதழ் கிராம சேவையாளா், பிரதேச செயலாளா்கள் ஊடாக பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்படும். 

ஒவ்வொரு 2 வருடத்திற்கு இச் சான்றிதழ் புதுப்பிக்கப்படும் எனத் தெரிவித்தாா். இதன் மூலம் உறவினா்கள் நன்மையடைவாா்கள் என நம்புவதாக திருமதி குமாரதுங்க தெரிவித்தாா்.

இந்த அமைச்சின் கபிணட் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவே பதவிவகிக்கின்றாா். இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி உள்ளார். இவா்களுடன் இனைந்தே நான் வட கிழக்கு பிரச்சினை இன நல்லிணக்கம். பாடாசலை மாணவா்களுக்கிடையே மூவினங்களை இணைத்து பலவேறு வேலைத்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றோம். 

பாடசாலை மாணவா்களுக்கிடையே தைப்பொங்கள், நோன்பு, நத்தாா், பொசன் பக்தீ கீ போன்ற நிகழ்வுகளை சகல இன பாடாசலை மாணவா்களையும் இணைத்து இன நல்லுரவுகளை வளா்த்து வருகின்றோம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -