கொத்மலை மகாவெலிசாய 33 வருடங்களுக்கு பின் ஜனாதிபதியால் திறந்து வைப்பு...!


பா.திருஞானம், க.கிஷாந்தன்-

1983 ஆம் ஆண்டு கொத்மலை நீர்தேக்கம் அமைக்கும் போது கட்டுமான பனிகள் ஆரபிக்கபட்டு சுமார் 33 வருடங்களுக்கு பின்னர் வேலைத்திட்டங்கள் பூர்த்தியாக்கபட்ட கொத்மலை மகாவெலிசாய விகாரை இன்று (20) ஜனதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு திறந்து வைக்கபட்டது. இலங்கையில் காணப்படும் மிக உயரமான ருவன்வெலிசாய விகாரையை விட 02 அடி உயரம் குறைவானதாகும். இந்த விகாரை இலங்கைளில் காணப்படும் 02 வது உயரமான விகாரையாகும்.

முன்னால் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர்.ஜெயவரத்தன ஆட்சி காலத்தில் மாகாவலி செயற்திட்டத்தின் அமைச்சராக இருந்த காலம் சென்ற அமரர் காமினி திசாநாயக்க அவர்களின் எண்ணத்தில் உதித்த இந்த கொத்மலை மகாவெலிசாய விகாரை வேலைத்திட்டம் 33 வருடங்கள் பின் தள்ளபட்டு தற்போது அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையில் பூர்த்தி செயய்பட்டுள்ளது.

கொத்மலை நீர்தேக்கம் அமைக்கும் போது நீருக்குள் மூல்கிய 14 விகாரைகளுக்கும் 2 தேவாலயங்களுக்கும் பதிலாக அமைக்கபட்டதே கொத்மலை மகாவெலிசாய. 1983.03.20 ஆம் திகதி இந்த வேலைத்திட்டம் ஆரபிக்கபட்டது பின் அமரர் காமினிதிசாநாயக்க அவர்களின் இறப்பிற்கு பிறகு இந்த வேலைத்திட்டம் ஸ்தம்மிதம் அடைய தொடங்கியது இதற்கு இடையில் காமினி விக்கரம பெரேரா அவர்களின் முயற்ச்சியில் மேலும் நிர்மாணங்கள் ஆரபிக்கபட்டன. 

தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபட்டன. தொடர்ந்து தற்போது இதன் வேலைத்திட்டம் பூர்த்தியான நிலையில் திறந்து வைக்கபட்டது. இந் நிகழ்வில் பெரும் திறலான பக்த்தர்கள், 08 பௌத்த நாடுகளை சேர்ந்த தூதுவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதல் அமைச்சர்கள், மாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள், இராஜசந்திரிகள் உடபட பலர் கலந்துக் கொண்டனர்.

உலகில் காணப்படும் விகாரைகளில் கடல் மட்டத்தில் இருந்து சரியாக 1000 அடி உயரத்தில் காணப்படும் முதல் விகாரை இதுவாக கருதபடுகின்றது. இந்த விகரையை 32 தூன்களில் தாங்கி நிற்கின்றது. இது ஒரு சிறப்பு அம்கமாகும். இதன் உயரம் 274 அடி, விட்டம் 200 மீற்றராகும். முற்றிலும் செங்கற்களினாலும், சில்வர் இரும்புகளினாலும் மாபில் பளிங்குகளினாலும் இந்த விகாரை அமைக்கபட்டுள்ளது. 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -