அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்த்திட்டத்திற்காக ஊவா மாகாணத்திற்கு 345 மில்லியன் வழங்கப்பட்டது...!


பா.திருஞானம்

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள பாடசாலைகளுக்கான ஆரம்ப கட்ட நிதியாக 345 மில்லியன் ரூபாவிற்கான காசோலை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இணைந்து மாகாண அதிகாரிகளிடம் வழங்கி வைத்தனர்.

இதன் போது கருத்து தெரிவிக்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்


என்னுடைய வேலைத்திட்டங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு மாணவர்களின் கல்வியை பழிவாங்க வேண்டாம் அரசியலையும் அபிவிருத்தியையும் தனித்தனியாக பிரித்து செயற்படுத்துங்கள் என வேண்டுகோள் ஒன்றை மாகாண சபைகளுக்கு விடுத்துள்ளார்.

தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்

நல்லாட்சி அரசாங்கத்தில் கல்வி அமைச்சு அதனுடைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மாகாண சபைகளுடன் இணைந்து செயற்படுத்துவதற்கே உத்தேசித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் கல்வி அமைச்சு என்ற வகையில் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் ஒரு சில மாகாண சபைகள் அந்த நிலையில் இல்லை குறிப்பாக மத்திய மாகாண சபையிலும் ஊவா மாகாண சபையிலும் இந்த நிலைமை தொடர்கின்றது. அதற்கு காரணம் அங்குள்ள ஒரு சில அமைச்சர்கள் என்னை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு மாகாண மாணவர்களின் கல்விக்கு குழி தோன்டிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இந்த நிலை தொடருமானால் அது அவர்களின் மாகாணத்தையே பாதிக்கும். அண்மையில் நாங்கள் ஊவாவிற்கு வழங்கிய ஆசிரியர் உதவியாளர்களை திருப்பி அனுப்பி இருக்கின்றார்கள். அதனால் எனக்கு எந்தவிதமான நட்டமும் ஏற்படப்போவதில்லை முழுமையான நட்டத்தை அனுபவிக்கப்போகின்றவர்கள் அந்த மாணவர்களே. எனவே கல்வியை அரசியல் ரீதியாக சிந்திக்காமல் எதிர்கால மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாகாண சபைகள் சிந்தித்தால் அது சிறப்பாக இருக்கும்.

இன்று ஓரு சில சமூக வலைதளங்கள் பிழையான தகவல்களுடன் சில செய்திகளை கல்வி அமைச்சு தொடர்பாக வெளியிடுகின்றார்கள். நான் அண்மையில் கொழும்பு ரோயல் கல்லூரிக்கு சென்று வந்ததை பார்த்த சிலர் அமைச்சர் நுவரெலியாவை மறந்து விட்டதாக செய்தி எழுதுகின்றார்கள். நான் இவர்களிடம் கேட்க விரும்புகின்றேன். நுவரெலியா மாவட்டத்தில் எத்தனை தேசிய பாடசாலைகள் இருக்கின்றன? அவற்றில் நாங்கள் செய்துள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் என்ன? போன்ற விடயங்களை சரியாக தெரிந்து கொள்ளாமல் இவ்வாறு பிழையான தகவல்களை வெளியிடுவது ஒரு பொறுப்பான ஊடகத்தின் கடமையாகாது. நான் எந்த விதமான உண்மையான குறைகளையும் சுட்டிக்காட்டினால் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றேன். எனவே தகவல்களை தேடி உண்மைகளை கொண்டு வருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -