தேசிய போக்குவரத்துக் கொள்கைக்கு ஏற்ப எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் பஸ் கட்டணங்களை நுாற்றுக்குப் 15 வீதம் அதிகரிக்காது போனால் ஜூலை 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து மாகாணங்களுக்குமான தனியார் உரிமையாளர் பஸ் சங்கம் அறிவித்துள்ளது.
அதன் செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் நேற்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.
பஸ் கட்டண அதிகரிப்பின் போது குறைந்த பஸ் கட்டணமாக 10 ரூபாவை நிர்ணயிக்க வேண்டும். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வில்லை. இதனால் தனியார் பஸ் போக்குவரத்துத் துறை கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.