அப்துல்சலாம் யாசீம்-
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவிடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம். எக்டெட் நிறுவனம் போன்ற அமைப்புக்கள் ஒன்றினைந்து இன்று ( 04) கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 40 ஊடகவியலாளர்களுக்கான உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான செயலமர்வினை ஆரம்பித்தது.
எக்டெட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலாளர் யூ.உதய சிறிதர் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.டி.கே.ஹெட்டியாராய்ச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வு இன்றும் நாளையும் இடம் பெறவுள்ளது.
இதில் கிழக்கு பல்கலைக் கழக சமூகவியல் விரிவுரையாளர் பகீரதி மோசஸ் கருத்து தெரிவிக்கையில்
கருத்து சுதந்திரம் .ஊடக சுதந்திரம் எவ்வாறு நமது நாட்டில் காணப்படுகின்றது. சட்டங்கள் ஏன் போடப்படுகின்றது என்பது பற்றிய விடயங்களை தெளிவு படுத்தினார். ஊடகவியலாளர்கள் சமுகத்தை தெளிவூட்டக்கூடியவர்களாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.