40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜீப் ரக வாகனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை


40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜீப் ரக வாகனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சுக்களின் கண்காணிப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு ஜீப்கள் வழங்கப்பட உள்ளன.


இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் அண்மையில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குத்தகை அடிப்படையில் வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. வாகனங்கள் வழங்கப்படும் வரையில் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் தலா இரண்டு லட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

இதற்கு மேலதிகமாக காரியாலய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக இதுவரையில் வழங்கப்பட்ட மூன்றரை லட்ச ரூபா ஐந்து லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. மொத்த தொகையில் 20 வீதத்தை மீள அறவீடு செய்யும் அடிப்படையில் இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக வார இறுதி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே நாடாளுமன்ற அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்கள் கொள்வனவு செய்து குறித்து அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அரசியல்வாதிகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் மேலும் சலுகைகளை வழங்க முன்வந்துள்ளமை சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -