அப்துல்சலாம் யாசீம், ஷபீக் ஹூசைன்-
திருகோணமலை- புல்மோட்டை பிரதேசத்தில் 450 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு இன்று (17) புல்மோட்டை அரபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
இதில் புல்மோட்டை பிரதேசத்தில் ஏற்கனவே குடி நீர் இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளுக்கான நீர் குழாயையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்துவைத்தார்.
நிதாவுல் ஹைர் நிறுவனத்தினால் நன்கொடையாளர் பைஸல் மிலாரியின் அனுசரனையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஸீர் அஹமட்பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர் மற்றும் சட்டத்தரணி ஜே.எம். லாஹீர்- நிதா நிறுவனத்தின் பொறுப்பாளர் ஆதம்பாவ மௌலவி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.