அமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.
மேலும் காயம் அடைந்த மேலும் 53 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிதாரி, தாக்குதல் ரைபிள் மற்றும் கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என்றும் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்த அவர், சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் பொலிஸாரை நோக்கி சுட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது
இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் என்று ஆர்லந்தோ பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.
இத் தாக்குதலை தனியாக நடத்தியுள்ளதாக கருதப்படும் சந்தேக நபர் உள்ளூர் பகுதியை சார்ந்தவர் அல்ல என்று பொலிஸார் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் நடைபெற்றுள்ள பல்ஸ் இரவு கேளிக்கையகம், ஒர்லாண்டோவின் முதல்தர ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகம் என்றும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிகின்றன.