சிப்லி பாறுக் அவர்களின் முயற்சியினால் மீன்பிடி இலாகா வீதிக்கு 60 இலட்சம் ரூபா நிதி ஒதிக்கீடு...!

ஹைதர் அலி-

ட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மீன்பிடி இலாகா வீதி என்றழைக்கப்படும் ஏத்துக்கால் வீதியில் ABC என்றழைக்கப்படும் கொங்ரீட் கலவை கொட்டப்பட்டு நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்ததனால் இந்த கொங்ரீட் கலவை தூசுகள் மூலம் அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வீதியினால் பயணம் செய்பவர்கள் பல்வேறு சுவாச நோய்களை எதிர்கொண்டனர். 

இந்நிலைமையினை தவிர்பதற்காக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களினால் இவ்வீதியின் புனரமைப்பு பணிகளுக்காக 2015ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை நிதி மூலம் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீதியின் ஒரு பகுதி கொங்ரீட் இட்டு புனரமைக்கப்பட்டது. 

இவ்வீதியில் எஞ்சியுள்ள பகுதிகளையும் கொங்ரீட் இட்டு புனரமைப்பதற்காக வேண்டி இவ்வருடமும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுகின் முயற்சியினால் 60 இலட்சம் ரூபா நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன். இதற்கான விலை மனுக்கோறல் அழைப்பும் கடந்த வாரம் பத்திரிகைகளின் மூலமும் விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேலும் இவ்வீதியை 2016.05.01ஆந் திகதி பார்வையிட சென்ற பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்கள் இவ்வீதியில் உடைந்த நிலையில் காணப்படும் கான் மூடிகளை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுத்ததோடு, நகர சபை அதிகாரிகளுடன் சென்று அவ் வீதியினை அளவீடு செய்யும் பணியிலும் ஈடுபட்டதோடு, அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.

காத்தான்குடி பிரதேசத்தினுடைய அபிவிருத்திக்காக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களினால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு வரப்படுகின்ற நிதி ஒதிக்கீடுகளை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தடுத்து நிறுத்துகின்ற முயற்சிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில் கடந்த வாரம் காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தினுடைய அபிவிருத்தி பணிகளுக்காக சுமார் 55 இலட்சம் ரூபா பெறுமதியான நிதியினை கட்டடம் கட்டுவதற்காக மாகாகண சபை நிதி ஒதிக்கீட்டில் கொண்டு வந்த போது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரால் குறித்த கட்டடம் கட்டுவதற்கான அரச காணியை முறையற்ற விதத்தில் அபகரித்துக்கொண்டு அதற்கான ஓர் போலியான உறுதிப்பத்திரத்தினை தயாரித்து வைத்து அந்த மாணவர்களுக்கான கட்டடத்தை கட்டாமல் தடுத்ததென்பது உண்மையில் இந்த சமூகம் விழிப்படைய வேண்டிய ஒரு தேவைப்பாடு இருக்கின்றது என்பதை குறித்துக் காட்டுவதாக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்தார்







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -