சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் இஸ்மாயில் மறைந்து 9வது வருட நினைவையொட்டி இன்று 6ஆம் திகதி திங்கட்கிழமை 9வது கத்தமுல் குர்ஆன் ஓதும் வைபவமும் நோன்புதுறக்கும் இப்தார் நிகழ்வும் இடம்பெறவிருக்கிறது.
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் நற்பணி மன்றம் இவ்ஏற்பாட்டைச் செய்துள்ளது.
இந்நிகழ்வு இன்று மாலை 4.30மணியளவில் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுத் தொகுதி மண்டபத்தில் மற்னத்தலைவர் வை.பி.சலீம் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் மார்க்கச்சொற்பொழிவு சிறப்புரைகள் நினைவுப்பேருரைகள் என்பன இடம்பெறும்.
பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைத்தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் கலந்து சிறப்பிப்பார்.
தென்கிழக்குப்பல்கலைக்கழக அறபு இஸ்லாமிய பீட கற்கைகள் நிலைய பீடாதிபதி கலாநிதி. எஸ்.எம்.எம்.மஸாஹிர் மார்க்கச் சொற்பொழிவையையும் சிறப்பரையையும் நிகழ்த்துவார்.
துஆப் பிரார்த்தனையை சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமாசபையின் பிரதித்தலைவர் யு.எல்.மகுறூப் மதனி நிகழ்த்துவார்.
நினைவுப்பேருரைகளை தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதிஎம்.எ.எம்.பாஸில் விரிவுரையாளர் எம்.எஸ்.எம்.பௌசர் ஆகியோர் நிகழ்த்துவார்கள்.