இனவாதத்தையும் மத வாதத்தையும் தூண்டும் காவிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்” - ACMC

ம் மாதம் 21 ஆம் திகதி (21.06.2016) மஹியங்கனையில் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரினால் நிகழ்த்தப்பட்ட பேச்சு, முஸ்லிம் சமூகத்துக்கெதிராக வன்முறைகளைத் தூண்டக் கூடிய, சட்ட விரோதமான - வெறுப்பூட்டும் பேச்சாக மாத்திரமன்றி சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகிய வற்றுக்கெதிராகவும் இருப்பதோடு பொலிஸ் அதிகாரத்துக்கெதிராகவும் விடப்பட்ட சவாலாக உள்ளது.

“2ஆவது அளுத்கம நிகழ்வுக்கு” வழிவகுக்கப் போவதாக ஞானசார தேரர் கூறியிருப்பது 2014இல் அளுத்கமையில் நடாத்தப்பட்ட அடாவடித் தனங்களுக்கு அவரே பொறுப்பு என்பதை தெட்டத் தெளிவாக எடுத்துக் கட்டுவதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அல்லாஹ்வையும் அவனது தூதர் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களையும் கொச்சைப்படுத்திப் பேசிய ஞானசார தேரருக்கெதிராக இதுவரை ஏன் சட்ட நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப் படவில்லை என்பது புதிராகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.

முஸ்லிம்களுக்கெதிராக இனக் கலவரங்களைத் தூண்டும் சட்டவிரோத, ஆத்திரமூட்டும் பேச்சினை நிகழ்த்திய ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஏன் இன்னும் எடுக்கவில்லை என்று கோரி மின்னஞ்சல்களை அதிகளவு ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணிலுக்கும் அனுப்புமாறு முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

அத்துடன், 2014 ஆம் ஆண்டு அளுத்கமையில் நடந்த திட்டமிடப்பட்ட இனக் கலவரத்தோடு தொடர்புடைய அடாவடித் தனங்களை கண்டறிவதற்கு விசாரணைக் குழுவொன்றை உடனடியாக நியமிக்கும்படி ஜனாதிபதியை வற்புறுத்தி கேட்டும் கொள்கின்றோம்.



இங்கனம்
எஸ்.சுபைர்தீன்
செயலாளர் நாயகம். அ.இ.ம.கா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -