ஜெஸ்வத் எலஹி-
இன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடனான சந்திப்பில் உயர்கல்வி அமைச்சர் கௌரவ லக்க்ஷன் கிரியெல்ல, வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் கௌரவ ரிஷாத் பதியுதீன், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தலைவர், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது முஸ்லிம் மாணவர்களால் முன்வைக்கப்பட்ட தேவைகள் அனைத்தும் கவனத்திற் கொள்ளப்பட்டதோடு, இத்தேவைகள் துரித கதியில் நிறைவேற்றி தரப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்டது போன்று இச்சந்திப்பை ஏற்பாடு செய்து தந்த அமைச்சர்களான லக்க்ஷ்மன் கிரியெல்ல, ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு நன்றிகள் உரித்தாகட்டும் மேலும் இந்நிகழ்வின் ஏற்பாடுகளை முன்னின்று செய்த சகோதரர் ஹசீப் அவர்களுக்கும் நன்றிகள்.
இறுதியாக எங்களது துஆக்களை அங்கிகரித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.