ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச எல்லைக்குள்ளும் கிரான் பிரதேச செயலகத்தின் அதிகாரத்திற்குள்ளும் இருக்கின்ற வாகனேரி குளத்தில் முஸ்லிம் சகோதரர்களும் தமிழ் சகோதரர்களும் தங்களது ஜீவனோபாயத்திற்காக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டடு வந்தனர். முஸ்லிம்கள் தரப்பில் சுமார் 280 பேர் வரையில் 1990ம் ஆண்டைய யுத்தகாலத்திற்கு முன்பு குறிப்பிட்ட வாகனேரி, அதனை அண்டிய முள்ளிவட்டவான், பொத்தனை போன்ற பிரதேசங்களில் நிரந்தமாக வசித்து வந்தமையும் வரலாறாகும். இந்த நிலையிலே 1962ம் ஆண்டு குறித்த பிரதேசத்திற்கான பிரதேச செயலத்தினால் மீன்பிடிபதற்கான அனுமதி வழங்கப்பட்டு இன்றும் குறிப்பிட்ட அனுமதிகளினூடாக மீன்பிடி தொழிலில் முஸ்லிம் தமிழ் சகோதரர்கள் ஈடுபட்டு வருக்கின்றனர்.
தற்பொழுது முஸ்லிம் தரப்பில் 46 தோணிகள் மீன்பிடி தொழிலுக்காக இருந்தும் 24 தோணிகளே மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் அண்மையில் குறித்த குளத்தில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்ற முஸ்லிம் சகோதரர்களுக்கு தமிழ் சகோதரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக கிரான் பிரதேச செயலகத்தினால் முஸ்லிம்கள் தரப்பில் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்த தோணிகள் அணைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து மீன்பிடி தொழிலுக்கு செல்வது முற்றாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இவ்விடயம் சம்பந்தமாக பல அரசியல்வாதிகளையும், அரசாங்க உத்தியோகத்தர்களையும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் தரப்பிலிருந்து சந்தித்து தங்களுக்கு நியாயம் பெற்றுதருமாறு வேண்டிநின்ற பொழுதும் கேட்பார் பாற்பார் அற்ற நிலையில் இருந்த குறித்த முஸ்லிம் சகோதரர்களின் மீன் பிடி பிரச்சனையானது பொறியியலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஷிப்லி பாரூக்கின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதன் பலனாக இரண்டு சமூகங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற முக்கியஸ்தர்களை சந்தித்த பொறியலாளர் ஷிப்லி பாரூக் மீன் பிடி தொழிலில் ஈடுபடும் முஸ்லிம் சகோதரர்கள் சிறிய வலைக்கண்களை உடைய வலைகளை கொண்டு மீன்பிடிப்பதினால் முற்றாக மீனினம் அழிக்கப்பட்டு ஜீவனோபயத்திற்கே ஆப்பு வைக்கின்ற நிலைமை ஏற்படக் கூடும் என்ற முக்கிய காரணத்தோடு இரண்டு சமூகங்கங்களும் சேர்ந்து ஒரே மீன்பிடி சங்கத்தின் கீழ் இயங்க வேண்டும் என்ற முக்கிய பிரச்சனைகள் தோணிகள் கைப்பற்றப்பட்டமைக்கான காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டது.
அணைத்து பிரச்சனைகளையும் இரண்டு தரப்புக்களிலிருந்து உள்வாங்கிக் கொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாருக் குறித்த பிரச்சனையினை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கவனத்திற்கும் உடனடியாக கொண்டு வந்தார். அத்தோடு கிரான் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர்களுடனும் கலந்துரையாடி இரண்டு தரப்பினரையும் சுமூகமான நிலைக்கு கொண்டு வரப்பட்டமை முக்கிய விடயமாகும். அத்தோடு பிரதேச செயலகத்தினால் கைப்பற்றப்பட்ட தோணிகளை உடனடியாக முஸ்லிம் சகோதரர்களிடம் கையளிக்கும் நடவடிக்கையினையும் மேற்கொண்டார். இதனால் வழமை போல முஸ்லிம் சகோதரர்கள் தமது ஜீவனோபயத்திற்காக தொடர்ந்து வாகனேரி குளத்தில் மீன் பிடி தொழிலில் ஈடுபட ஆரம்பித்துள்ளதோடு பிரச்சனைக்கு தீர்வினை பெற்றுத்தந்த பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கிற்கு தமது நன்றிகளையும் தெரிவித்து கொண்டனர்.a