பாலமுனையின் முதல் பெண் சட்டத்தரணியாக றிஸ்மியா!

அய்ஷத்-

ண்மையில் வெளியான சட்டக் கல்லூரி இறுதி பெறுபேற்றுக்கமைய பாலமுனை 4ம் பிரிவைச் சேர்ந்த உதுமாலெவ்வை முஹம்மது எஹியா,ஆதம்பாவா யூ ஹனீதா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வி றிஸ்மியா சித்தியடைந்து முதல் பெண் சட்டத்தரணியாக பாலமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். தரம் 01 தொடக்கம் உயர் தரம் வரையும் பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தில் கற்றார்.

2010-2011 இல் NAITA வில் Certificate in Computer Hardware & Data Entry Operator கற்றார்.

2012 இல் இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையில் சித்தி பெற்று 2013-2015 இல் அங்கு கற்றுத் தேர்ந்து சட்டத்தரணியானார்.

தற்சமயம் பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக BA பட்டப்படிப்பை மேற்கொள்கின்றார். பாலமுனையிலிருந்து முதன் முதலாக சட்டக் கல்லூரி நுழைவுப்பரீட்சையில் சித்தி பெற்றவர்,பாடசாலைக் கல்விக்கு பிற்பாடு சட்டக்கல்லூரி செல்லும் வரை பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தில் தொண்டர் ஆசிரியையாக சேவையாற்றி பாலமுனையின் கல்வி வளர்ச்சிக்கு உரம் சேர்த்தார்.

சமூக சேவையின்பால் ஈடுபாடுடைய இவர் பாலமுனை SRC அமைப்பின் அங்கத்தவராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -