அளுத்கம: முஸ்லிம் இளைஞனிடம் மன்னிப்புக்கோரிய பொலிஸ் அதிகாரி

இளைஞ்சர் ஒருவரை கைது செய்தமை தொடர்பில் அளுத்கம பொலிஸ் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி ஆர். லக்ஷித பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் முன்னிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

அழுத்தகம முஹம்மட் அஸ்மி எனும் இளைஞன் தொடுத்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணையின் போதே இவ்வாறு குறித்த இளைஞனிடம் மேற்படி பொலிஸ் அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார். இதேவேளை, குறித்த இளைஞனுக்கு எதிராக களுத்துறை நீதவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

‘அபசரனை’ என ஒரு பெண்ணை அழைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் துன்புறுத்தப்பட்டுள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் மற்றும் பீ. அலுவிஹார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டத்தரணி உள்ளிட்ட குழுவினர் மனுதாரர் சார்பாக ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -