அட்டாளைச்சேனையில் சுமார் 4000 பேருக்கான இப்தார் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (18) ஆம் திகதி அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸிர் அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்த இப்தார் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ள இந்த இப்தார் நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது இடம்பெற்று வருவதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (14) தெரிவித்தார்.
மேலும் இந்த மாபெறும் இப்தார் நிகழ்வுக்கு கிழக்கின் முதல்வர், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், உயரதிகாரிகள், உலமாக்கள், கல்விமான்கள், கட்சியின் போராளிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.