போதைப்பொருள் மொத்த வியாபாரி வாழைச்சேனையில் கைது



ட்டக்களப்பு மாவட்டத்தின், வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமமான  பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் பாடசாலைக்கு முன்பாக 2016.0629ஆந்திகதி (இன்று) பிற்பகல் போதைவஸ்த்து மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது வாழைச்சேனை குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் அமீர்அலி அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து மிக நுட்பமான முறையில் பிறைந்துறைச்சேனை அறபா வீதியினைச் சேர்ந்த ஜலால்தீன் முஹமட் அஸ்மி என்ற போதைப்பொருள் விற்பனையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.

இக்கைது சம்பந்தமாக கருத்து தெரிவித்த உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் அமீர்அலி;

கைது செய்யப்பட்டுள்ள நபர் போதைப்பொருள் மொத்த வியாபாரி என்றும் பல குற்ற நடவடிக்கைகள் சம்பந்தமாக தேடப்பட்ட நபர் என்றும், இவரின் கைதுடன் சுமார் என்பது வீதமான போதைப்பொருள் பாவனை இப்பிரதேசத்தில் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட அவர் தன்னுடைய இரண்டாம் கட்ட நடவடிக்கையாக சட்ட விரோத கஞ்சா வியாபாரிகளுக்கு வலைவிரிப்பதே என்றும் குறிப்பிட்டார். 

இந்த சுற்றி வளைப்பினை வாழைச்சேனை குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் அமீரலி அவர்களின் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான இஸ்மாயில், பண்டார மற்றும் குமார ஆகியோர் மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நௌபல்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -