தெஹிவளை பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகளுக்கு பொலிஸார் தடைவிதித்துள்ளமையால் தறாவிஹ் தொழமுடியாத பரிதாபம் ஏற்பாட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
விஸ்தரிப்புப் பணிகள் முற்றுப் பெறாததால் பள்ளிவாசல் தரை விரிப்புகள் மழை நீரினால் நனைந்து தராவீஹ் தொழுகையை மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் விவகாரம் ஜனாதிபதி, பிரதமர், சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு பொலிஸார் தொடர்ந்து தடைவிதிப்பது தொடர்பாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன், கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் என்போர் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்காவிடம் முறையிட்டனர்.
அமைச்சர் சாகல ரத்னாயக்க விஸ்தரிப்பு பணிகளைத் தொடர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.