சுலைமான் றாபி-
அர் ரப்பானியா இஸ்லாமிய கலாபீடத்தினால் ஹதீஸ் பட்ட பின் டிப்ளோமா கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த 14 பேர்களுக்கான பட்டமளிப்பு விழாவும், நிந்தவூரில் காணப்படும் காபிழுகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும் கடந்த (03) வெள்ளிக்கிழமை நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.
நிந்தவூர் பாத்திமா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபரும், அர் ரப்பானியா இஸ்லாமிய கற்கைகளுக்கான நிறுவகத்தின் அதிபருமான அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் அலி அஹ்மத் (றஷாதி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவிற்கு இந்தியாவிலிருந்து வருகை தந்த அஷ்ஷெய்க் ரூஹுல் ஹக் (அர் றஷாதி) அவர்கள் கலந்து கொண்டு நாற்பதாயிரம் ஹதீஸ்களையும், அவற்றை கிரமந்தவறாது அறிவித்தவர்களது பெயர்களையும் கடந்த ஒரு வருடமாக அறிந்து மனதிலிருத்தி ஹதீஸ் கலைகளைப் கற்றுத் தேறியவர்களுக்கான பட்டங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டியதோடு, நிந்தவூரில் காணப்படும் 70ற்கும் அதிகமான ஹாபிழ்களையும், நிந்தவூரின் மூத்த உலமாக்களையும் பாராட்டி கௌரவித்திருந்தார்.
இதேவேளை நிந்தவூரில் இடம்பெற்ற ஹதீஸ் பட்டப்பின் படிப்பின் டிப்ளோமா கடற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான இப்பரிசளிப்பு நிகழ்வானது நிந்தவூர் வரலாற்றில் மிகவும் முக்கியமான சரித்திரமாக மாறியதோடு, நிந்தவூரில் முதன் முதல் முப்தி பட்டம் பெற்ற மௌலவி எம்.எச். மின்ஹாஜ் அவர்களும் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.