கட்டார்சரிட்டி நிறுவன கபாலா நிகழ்ச்சித்திட்ட நிதியின் கீழ் புத்தளம் ஐ.எஸ்.ஆர்.சியினால் தந்தையை இழந்த சிறார்களுக்கான கல்வி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று ஐ.எஸ்.ஆர்.சி புத்தளம் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஐ.எஸ்.ஆர்.சியின் பணிப்பாளர் மிஹழார் அவர்களின் வழிகாட்டலில் நிருவனத்தின் தானாதிகாரி ஏ.சி.எம்.மர்சூக் அவர்களின் தலைமையின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிறுவன இணைப்பாளர் ஜுனைட் நளீமி, சகோதரர் ரபீக், நிறுவனத்தின் செயலாளர் ஜெ.எம்.மஸாஹிர், ரிஸ்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது 34 மாணவ மாணவிகள் மாதாந்த உதவு தொகையினை பெற்றுக்கொண்டதுடன் குறித்த மாணவர்கள் தமது கல்வி மற்றும் மேற்படிப்பு என்பதனை முடிக்கும் வரையான உதவித்தொகைகள் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி கட்டார் சரிட்டியின் திட்டத்தின் மூலம் இவ்வருடம் 500 மாணவர்களுக்கான மாதாந்த உதவு தொகையினை வழங்குவதற்கான நடவடிக்கையினை ஐ.எஸ்.ஆர்.சி மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.எஸ்.ஆர்.சீ நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இன மொழி வேறுபாடுகளுக்கப்பால் மனித நேயப்பணிகளினுடாக சமூக நல்லிணக்க செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஐ.எஸ்.ஆர்.சீ நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இன மொழி வேறுபாடுகளுக்கப்பால் மனித நேயப்பணிகளினுடாக சமூக நல்லிணக்க செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.