தெஹிவளை பாத்தியா மாவத்தை பள்ளிவாயல் விஸ்தரிப்பு பணிகளை தடையின்றி மேற்கொள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயகவுடன் நிகழ்ந்த கலந்துரையாடலின் பின்னர் உடன்பாட்டு எட்டப்பட்டுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பாக இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த பள்ளிவாயலின் விஸ்தரிப்பு பணிகளை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் சாகல ரத்நாயக இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, குறித்த பள்ளிவாசலின் விஸ்தரிப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் இணங்கியுலமை குறிப்பிடத்தக்கது.