அஷ்ரப் ஏ சமத்-
சர்வதேச வை.எம்.எம். ஏ மற்றும் லயண்கழகத் கொழும்பு தலைவா் சமுக சேவையாளா், சமுகபற்றாளா் அஷ்ரப் ஹூசைன் மிகவும் கடுமையாக சுகவீனமுற்றுள்ளாா்.
அவருக்காக நேற்று(19) தினகரன் ஆலோசகா் நிலாம் தலைமையில் துஆப் பிராத்தனையும் இப்தாா் நிகழ்வும் கொழும்பு 7ல் உள்ள சுல்தான் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அஸ்ரப் ஹூசைனுடன் நெருங்கி பழகியவா்கள் கலந்து கொண்டனா். அத்துடன் முன்னாள் இராஜாங்க அமைச்சா ஏ.எச்.எம் அஸ்வா் அவா்கள் அஸ்ரப் ஹுசைன் பற்றி அவரது நல்ல சேவைகள், குணங்கள் பற்றியும் பேசினாா். முஸ்தபா மொலவி அஸ்ரப் ஹூசைனுக்கு சுகம் வேண்டி இறைவனிடம் பிராத்தனை நடாத்தினாா்.