எதிர்க்கட்சியில் இருப்பவர்களை நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைப்பது போன்று அரசாங்கத்தில் இருக்கும் மோசடி காரர்களையும் விசாரணைக்கு அழைக்கவேண்டும். அப்போதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்படும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்துவோம் இயக்கம் இன்று (01) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் நிதி குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதை வரவேற்கின்றோம்.
அதேபோன்று அரசாங்கத்தில் இருக்கும் ஊழல் மோசடிகளுடன் தொடர்புப்பட்டவர்களையும் விசாரணைக்கு அழைக்கவேண்டும் அப்போதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் நம்பிக்கை ஏற்படுமென இதன்போது தெரிவித்தார்.