சுலைமான் றாபி-
சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமின் முன்னெடுப்பின் கீழ் கிழக்கு மாகாண மக்களின் சுகாதார தேவையினை கருத்திற் கொண்டு இம்மாகாணத்தில் காணப்படும் வைத்தியசாலைகளில் இவ்வருட இறுதிக்குள் பூரண உடல் பரிசோதனை நிலையங்களை (Full Body Check-up Center) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.
இவ் விடயம் சம்பந்தமாக அவர் மேலும் கருத்து தெருவிக்கையில்..
மக்கள் தங்களுக்கு இருக்கும் நோய்களை கண்டறிந்து உரிய மருத்துவத்தினை பெற்றுக் கொள்வதற்கும், தொற்றா நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கும் உடல் பரிசோதனை மிக அவசியமாக உள்ளது. இப் பூரண உடல் பரிசோதனையினை மக்கள் தனியார் வைத்தியாசாலைகளில் பெரும் தொகை பணத்தினை செலவிட்டே இவ்வுடற்பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே பொது மக்களின் இவ்வாறான தேவையினை கருத்திற் கொண்டு இவ்வருட இறுதிக்குள் கிழக்கு மாகாண அரச வைத்தியசாலைகளில் இலவசமாக பூரண உடல் பரிசோதனை நிலையத்தினை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் பைசால் காசிம் மேலும் தெரிவித்தார்.