இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவுர் பிரதேசத்தில், சிற்றன்னையினால் சித்திரவதைக்குள்ளான இரு சிறுமிகள் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளினால் மீட்கப்பட்டு அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் . சிறுமிகளின் சிற்றன்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறிய தாயின் கொடுமைகளுக்குள்ளான சிறுமிகளின் உடலில் தடயங்கள்
8 மற்றும் 10 வயதுடைய இந்த சிறுமிகளின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிப் பெண்ணாக பணியாற்றி வருகின்றார். தாயின் சகோதரியின் பராமரிப்பில் இருந்த போது, சிற்றன்னை மற்றும் சில உறவினர்களினால் இரு சிறுமிகளும் கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளினால் மீட்டகப்பட்ட இந்த சிறுமிகளின் உடம்பில் சித்திரவதைக்குள்ளான தடயங்கள் காணப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
இரு சிறுமிகளும் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று தமது விசாரனைகளின் போது தெரிய வந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் வறுமை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் தொகை அதிகரித்தது வருவதாக கூறப்படுகின்றது
குறிப்பாக இளம் தாய்மார்கள் உறவினர்களிடம் பிள்ளைகளை ஓப்படைத்து செல்வதால், இது போன்ற சித்திரவதை , துஷ்பிரயோகம் மற்றும் கல்வி கற்கும் உரிமை மறுப்பு போன்ற பிரச்சினைகளை சிறார்கள் சந்திப்பதாக சமூக ஆர்வலர்களினால் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதே வேளையில் வவுணதீவு பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலில் 6 வயது சிறுமியொருத்தி பலியாகியுள்ளார். சிறுமியின் தந்தை காயங்களுடன் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
மூலம்: bbc