அஷ்ரப் ஏ சமத்-
ரோயல் கல்லுாாி மாணவன் சசங்க அல்விஸ் கோமா நிலையில் பாதிக்கப்பட்டதை வலையத்தளங்களின் செயதிகளை பாா்த்து இரவோடு இரவாக கொழும்பு வந்து கல்முனை சர்ஜூன் அபுபக்கா் பாதிக்கப்பட்ட மாணவனது கொள்ளுப்பிட்டி வீடு தேடி உதவினாா்.
ரோயல் கல்லுாாி மாணவன் கடந்த 3 வருடத்திற்கு முன் ரோயல் கல்லுாாியின் நீச்சல் தடாகத்தில் மூச்சுத் தினரி பாதிக்கப்பட்டு அன்றில் இருந்து இன்றுவரையில் கோமா நிலையில் வாடுகின்றான். இவருக்கு வாழ்வதற்கு வீடொன்று இல்லாமலும் இருந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதம மந்திரியினால் வீடொன்று வழங்கப்பட்டது.
ஆனால் இதுவரை ரோயல் கல்லுாாியின் பழைய மாணவா்கள், பாடசாலை அதிபா் ஆசிரியா்கள் உதவ முன் வரவுமில்லை, குடியிருந்த வீட்டைக் கூட வீதி அபிவிருத்தி அதிகாரியினால் வீதி அபிவிருத்திக்கு உடைக்கப்பட்டதனாலேயே இந்தச் செய்தி சிங்கள பத்திரிகைகளில் ஊடகங்களில் வெளிவந்தன.
இதனை அறிந்த பிரதமா் ரணில் விக்கிரமசிங்ஹ, மற்றும் அமைச்சா் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே குடியிருப்பதற்கு மருதானையில் வீடொன்றை தந்ததாக இச்சிறுவனின் தாயாா் கூறினாா்
ஆனால் இச்செய்தியை அறிந்த கல்முனை வி.கா பௌன்டேசன் தலைவா் சர்ஜீன் அதுவும் ஒரு முஸ்லீம் கல்முனை இருந்து உதவுவியதற்கு நன்றி தெரிவித்தாா்.
இங்கு கருத்து தெரிவித்த சா்ஜூன்-
உலகில் மிக பிரபல்யமாக இயங்கும் ரோயல கல்லுாாி மாணவா்கள் அதிபர், ஆசிரியா்கள் பழைய மாணவா்கள் நலன் விரும்பிகள் இதுவரை இம்மாணவனுக்கு உதவாமல் இருப்பது மிகவும் வருத்தத்தை தருகின்றது.
இந்த பரிதாப சம்பவத்தைக் கேட்டே ஊடகவியலாளா் அஸ்ரப் ஏ சமதிடம் இம்மாணவனின் தாயின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றே கல்முனையில் இருந்து உதவ முன்வந்தேன்.
இதைப்போன்று ஏனையோரும் மணிதபினமானம் கொண்டு இன, மத கலை கலாச்சாரங்களுக்கு அப்பால் உதவுங்கள் என வேண்டிக் கொண்டாா்.