"முஸ்லிம் சமூகம் கல்வி முன்னேற்றத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்"

கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் 

பி.எம்.எம்.ஏ.காதர்-

முஸ்லிம் சமூகம் கல்வி முன்னேற்றத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய அவசியம் எற்பட்டிருக்கின்றது இக்கால கல்விப் பெறுபேறுகள் வீழ்ச்சி நிலையையே காட்டுகின்றது இந்த நிலை எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் தெரிவித்தார். 

மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையம்(ளுநுளுநுகு)மருதமுனையின் கல்வி வீழ்ச்சி தொடர்பில் ஆராய்ந்த விஷேட கூட்டம் மருதமுனை பொது நூலக வளநிலைய கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை(12) அமையத்தின் பிரதம செயற்பாட்டுப் பணிப்பாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது இதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமையத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.வலீதின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றகையில்:-இன்று எமது நாட்டின்; முஸ்லிம் பிரதேசங்களின் கல்வி மிகவும் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது தரம் ஐந்து புலமைப்பரிசில் ,க.பொ.த.சாதாரண தர,உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அண்மைக்காலமாக பெரும் விழ்ச்சியடைந்திருக்கின்றது இந்த நிலை ஆரோக்கியமானதல்ல தேசிய மட்;டத்தில் முஸ்லிம் கல்வியலாளர்கள் இது பற்றி ஆராய வேண்டும். 

மருதமுனையில் இருக்கின்ற கற்றல்.கற்பித்தலுக்கான வளங்களை சரியாகப் பயன்படுத்தப்படாமையே மருதமுனையின் கல்வி விழ்ச்சிக்குக் காரணமாகும் இந்த விடையம் பற்றி ஆராய்வதற்கும் முன்னெடுப்பதற்கும் 'கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையம்' முன்வந்திருப்பது வரவேற்கத்தக்க விடையமாகும் மருதமுனையின் கல்விப் பின்னடைவின் பின்புலத்தில் பெற்றோர்கள்; கவனம் செலுத்தவேண்டிய அவசியம் இருக்கின்றது பிள்ளைகள் கற்பதில் அக்கறை இல்லாமல் இருப்பதையும்,ஏனோதானோ என்று இருப்தையும் அவதானித்து அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் அமையத்தின் பிரதம ஆலோசகர் நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப்,பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம்,அமையத்தின் ஆலோசகர்களான நிர்வாக சேவை அதிகாரி ஜே.லியாகத் அலி,பொறியிலாளர் கலாநிதி எஸ்.எம்.ஜூனைட் உட்பட அமையத்தின் சமூக வலுவூட்டலுக்கான பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,கல்விக்கான பணிப்பாளர் கலாநிதி ஏ.ஏ.நுபைல் நிதி பணிப்பாளர் எம்.எப்.எம்.மர்சூக் ஆகியோரும் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அமையத்தின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -