நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர அரசியலில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
அண்மையில் கடும் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில், கொலன்னாவ பிரதேசத்திற்கு செல்லாதிருந்த ஹிருணிக்கா, வெள்ளத்தின் பின்னர் அங்கு சென்ற போது பிரதேசவாசிகள் வெளியிட்ட கடும் எதிர்ப்பே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த விடயம் சம்பந்தமாக ஹிருணிக்கா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது.