மஹியங்கனையில் சற்று முன்னார் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக கடும் பதற்ற நிலை தோன்றியுள்ளது. சமீப நாட்களாக மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தீ பற்றியெரியத் தொடங்கியிருந்த நிலையில், அதற்கு எண்ணெய் வார்க்கும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான கடுமையான வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள் மஹியங்கனை நகர் மற்றும் சுற்றுப் புறங்களில் ஒட்டப்பட்டிருந்தது. விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
எனினும் அச்சநிலை தொடர்ந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் இனவாத சுவரொட்டி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு பொதுபல சேனாவின் ஆதரவுடன் சிங்களவர்கள் பெரும் ஆர்ப்பாட்டமொன்றில் குதித்துள்ளனர்.
மஹியங்கனை பிரதான வீதி மறிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மஹியங்கனை சுற்றுவட்டாரத்தில் பெரும் அச்ச நிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் பதற்றத்தைத் தணித்து, முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும். சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து செய்திகளை உரிய இடங்களுக்கு அறிவிக்கவும், சமூகத்தின் மத்தியில் பகிர்ந்து நிலைமையத் தெளிவுபடுத்தவும் முன்வரவேண்டும்.
பதற்றம், அச்சத்துடன் தவித்துக் கொண்டிருக்கும் மஹியங்கனை முஸ்லிம் சகோதரர்களுக்காக நான் இந்தத் தருணத்தில் அல்லாஹ் வின் பாதுகாப்பை வேண்டி துஆ செய்கின்றேன்.
அவனே என் சகோதரர்கள், சகோதரிகளின் அச்சத்தைப் போக்கி அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வல்லமை கொண்டவன்..
யா அல்லாஹ், மஹியங்கனை மட்டுமன்றி இலங்கை, உலக முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவாயாக. அச்சமற்ற ஒரு சூழலில் வாழும் நிலையை எங்களுக்கு ஏற்படுத்தித் தருவாயாக..ஆமீன்..யாரப்பில் ஆலமீன்.
srilankamuslims