பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
காணி விவகாரம் ஒன்றில் நிதி மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சதுப்புநிலத்தை நிரப்புவதற்காக அந்நிலத்தை சூழ குடியிருந்தவர்களை அப்புறப்படுத்துவதாக உறுதி மொழி வழங்கி, 64 மில்லியன் ரூபா பணத்தை கோரியதோடு, அத்தொகையிலிருந்து 15 மில்லியனை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே, பிரசன்ன ரணதுங்கவுக்கும் அவரது மனைவிக்கும் எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களை 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் செல்ல நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.