அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக நாட்டுக்குள் சதி நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அதற்கு இராணுவத்துக்குள் இருக்கும் பாஸிசவாத கொள்கையுடையவர்கள் உதவி புரிவதாகவும் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்;
அரசாங்கம் தொடர்பில் சிலர் மக்கள் மத்தியில் பொய் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அத்துடன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சதித் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு இராணுவத்துக்குள் இருக்கும் பாஸிசவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களும், மறைந்திருந்து துணைபோகின்றனர்.
கொஸ்கம சாலாவ இராணுவ ஆயுத களஞ்சியசாலை வெடிப்புக்கான காரணம் இதுவரை வெளிப்படவில்லை. இந்த சம்பவமும் சதி நடவடிக்கையாகவே இருக்கவேண்டும். இது அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட செயலா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.dc