கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் விவகாரங்களில் பசில் ராஜபக்ச தொடர்புபடக் கூடாது என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்ச முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தனது நன்மதிப்பினை மேம்படுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு கூட்டு எதிர்க்கட்சியின் பலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக இதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரிவித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சிக்கு தலைமை வழங்கி வரும் நிலையில் பசில் ராஜபக்ச உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படுவது விமல் வீரவன்ச உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை ஆத்திரமடையச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.