"இலங்கைக்கான ஏற்றுமதி சேவைகளை எவ்வாறு அதிகரிப்பது?" என்ற கருப்பொருளில் செயலமர்வு ஒன்று கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான வணிகத்திணைக்களத்தினால் இன்று (27) பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்ததுடன் அங்குரார்ப்பண உரையையும் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் ஜெனீவாவில் இயங்கும் உலக வணிக அமைப்பின் வர்த்தக சேவைகள் பணிப்பாளர் ஹமித் மம்தொஹ் (Mr. Hamid Mamdouh) மற்றும் வைத்தியர்கள், விரிவுரையாளர்கள், பொறியியலாளர்கள், உட்பட பல உயர் துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த செயலமர்வுக்கான ஒத்துழைப்பை பண்டாரநாயக்கா சர்வதேச கற்கைகள் மையம் வழங்கியுள்ளது.