சப்னி-
சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு பாலமுனை இப்னு சீனா வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் எஸ்.எம்.சாஹிர் ஹூசைன் தலைமையில் சுற்றாடல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. அட்டாளைச்சேனை தேசியக்கல்விக் கல்லூரியின் பீடாதிபதி நவச் அவர்களுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் இர்பான் PSI இணைப்பாளர் ஜனாப் எம்.ஐ.அன்சார், ஓய்வு பெர்ற் முறைசாராக் கல்வி ஆசிரிய ஆலோசகர் அல்ஹாஜ் என். சம்சுத்தீன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
அத்துடன் சுற்றாடலை பேணவேண்டிய அவசியம் பற்றிய அறிவுரம்றுத்தல் கூட்டமும் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போது மரக்கன்றுகளை நட வேண்டிய அவசியத்தையும் சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
மேலும், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அதிக பெயற்பாட்டினை காட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் கல்விக்கல்லூரி இருந்து ஒரு வருட காலத்திற்கு பயிற்சியில் ஈடுபட்டவர்களை பாராட்டி கெளரவமும் வழங்கப்பட்டது.