ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதை ஒழிப்பு மாதம் மற்றும் சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினம் தொடர்பாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையினால் ஏற்பாடுசெய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்வுகள் வைத்திய அத்தியட்சகர் எம்எச்எம் தாரிக் தலைமையில் 20.06.2016 நடைபெற்றன.
வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.
வைத்தியசாலை முன்றலிலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் புன்னக்குடா வீதி வழியாக சற்றுதூரம் சென்று மீண்டும் வைத்தியசாலை முன்றலில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு தொடர்பாக வலியுறுத்தும் வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்திச் சென்றனர்.
வைத்திய நிபுணர் சமிந்த கோட்டகே மற்றும் டாக்டர் எச்எம்எம் மௌஜூத் உள்ளிட்டவர்களும் இதில் பங்கேற்றனர். இறுதியில் புகைத்தல் மற்றம் போதைப்பொருட் பாவனையினால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி டாக்டர் எச்எம்எம் மௌஜூத் விழிப்புணர்வு உரையாற்றினார்.