சமகாலத்தில் துணிச்சல்மிக்க அரசியல் வாதியாக கிழக்கின் முதல்வர்...!

அஹமட் இர்ஷாட்-
லை எனும் வட்டத்திற்குள் இருப்பவை தான் அரசியல், நாடகம், நடிப்பு, சினிமா, இசை, சமயம், கலாசாரம், பண்பாடு, தத்துவம், சமூகவியல் தத்துவம், சட்டம் என்பவைகள் அடங்குகின்றன. 

அந்த வகையிலே அரசியல் என்பது கலையின் ஒரு பிரிவாகவே இருக்கின்றாது. அரசியலுக்குச் சரியான நேரத்தில் சரியான முடிவினை சாதுரியமான முறையில் எடுப்பது என்ற வரைவிலக்கணமும் இருக்கின்றது. 

அரசியலைப் பொறுத்த மட்டில் கலையின் ஒரு பிரிவாகக் கருதி, அரசியலை மேற்கொள்கின்ற அரசியல்வாதிகளும் இருக்கின்றார்கள்.அரசியலினை ஒரு சமூகத்தின் கொள்கைக்காகவும் தனது கொள்கையிலிருந்து ஒரு அங்குளமேனும் விலகிச் செல்லாது, தான் நினைக்கும் விடயத்தினைச் சாதிக்கின்ற அரசியல்வாதிகளும் இருக்கின்றார்கள். 

அதையும் தாண்டி முடிவுகளைக் காலத்திற்கேற்றவாறும் ஏனைய அரசியல்வாதிகளைப் பகைத்துக் கொள்ளாத வகையில், முடிவுகளை சமயோசிதமாக எடுப்பவர்களும் இருகின்றார்கள். ஆனால், கிழக்கின் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தான் ஒரு முடிவினை எடுக்கின்ற பொழுது எதிர்காலத்தில் எது நடந்தாலும் அதற்கு சிறிதளவேனும் அஞ்சாமல் அந்த முடிவினைச் சாதித்துக் காட்டுவதும் அல்லாமல், தான் தெரிவு செய்த பாதையினை எதற்காகவும் விட்டுகொடுப்புச் செய்ய முடியாத வகையில் முன்வைத்த காலினைப் பின் வைக்காமல் தனது பயணத்தினை மேற்கொள்ள கூடிய, சம காலத்திலிருக்கின்ற துணிச்சல்மிக்க அரசியல்வாதியாகவே நான் ஹாபிஸ் நசீர் அஹமட்டினை பார்க்கின்றேன்.

இதற்கு அண்மையில் பரவலாக தேசியத்தில் மட்டுமல்லாது, உலகலாவிய ரீதியில் பேசப்பட்ட விடயமான திருகோணமலையில் இடம்பெற்ற கடற்படை அதிகாரியுடனான முரண்பாடு சிறந்த உதாரணாமாகும். 

அவ்விடயத்தினை பல அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதுடன், இந்நாட்டிலே பெரும்பான்மைச் சமூகத்திலிருக்கின்ற பேரினவாதிகள் ஒரு சிறுபான்மைச் சமூகத்தினைச் சேர்ந்தவர் பெரும்பான்மை சமூகத்தினையும், இந்நாட்டையே சீரழித்துக் கொண்டிருந்த முப்பது வருட கொடிய யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வந்த இராணுவத்தினரைக் கொச்சைப்படுதியதாக அறிக்கைகளை அள்ளி வீசி எறிந்தனர்.

அந்த அறிக்கைகளானது பெரும்பான்மைச் சமூகத்தினை இனவாதத்தின் ஊடாக முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு நேரடியாகத் தொடுக்கப்பட்ட பல்முனைத் தாக்குதல்களை விடவும் கொடியவையாகவே பார்க்கப்படுகின்றது.

குறித்த கடற்படை அதிகாரியுடனான முரண்பாட்டுச் சம்பவமானது, பிழையா? சரியா? என்பது ஒரு புறமிருக்க, அச்சம்வத்தினை வைத்து, முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிற்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள், பல்முனை அரசியல் தாக்குதல்கள், சுயநல அரசியல்வாதிகளின் நேரம் பார்த்துத்தாக்கும் கொரில்லா வேட்டுக்கள், இவையனைத்திற்கும் மேலாக பேரினவாதிகளின் நேரடித் தாக்குதல்கள் இவையனைத்தினையும் முறியடித்து, தான் அரசியலில் பயணிக்க கீறியுள்ள கோட்டில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு துணிச்சலின் நேரடி விம்பமாகவே கிழக்கின் முதலமைச்சர் செயற்பட்டு வருகின்றார்.

1989ம் ஆண்டு இந்திய ஜனாதிபதி ராஜீவ் காந்தி இலங்கைக்கு இந்தி-இலங்கை ஒப்பந்தத்தினைக் கைச்சாத்திட வருகை தந்திருந்த நேரத்தில், அவருக்கு வழங்கப்பட்ட இராணூவ அணிவகுப்பு மரியாதையின் பொழுது ராஜீவ் காந்தி இலங்கைத் தீவினைத் துண்டாட வந்திருக்கின்றார் எனக்கருதிய கடற்படை வீரர் தனது துப்பாக்கியினால் ராஜீவ் காந்தியின் பின் தலையில் தாக்க முற்பட்டமையானது, இலங்கை இராணுவத்தின் துணிச்சளுக்கும் தேசபற்றுக்கும் ஒரு மிகப்பெரிய எடுத்துகாட்டாக வரலாற்றில் பதியப்பட்டுள்ள விடயமாக இருக்கின்றது.

இவ்வாறு வரலாறுகள் இருக்கத்தக்க திருகோணமலையில் இடம் பெற்ற கடற்படை அதிகாரியுடனான முரண்பாடு சம்வமானது முதலமைச்சருக்கெதிராகப் பூதாகரமாக்கப்பட்டு, இலங்கை முப்படைத் தளங்களிலும் இடம்பெறுகின்ற விழாக்களில் முதலமைச்சர் கலந்து கொள்வதற்கு முப்படைத் தலைமையகம் தடை விதித்திருந்து.

இருந்தும், அத்தடை அகற்றப்பட்டு சில நாட்களுக்குள் திருகோணமலை கடற்படை முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகல் விருந்துபசாரத்தில் கலந்து கொள்ள அவர்களினுடைய அழைப்பினையேற்று, சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன், மத்திய அமைச்சர் மலிக் சமர விக்ரம ஆகியோர் சகிதம் கிழக்கின் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் துணிச்சலுடன் திருகோணமலை கடற்படை முகாமிற்குச் சென்றிருந்தார்.

அத்துணிச்சல்மிக்க சம்பவமானது, சமகாலத்திலிருகின்ற அரசியல்வாதிகளில் தான் எடுத்து நடக்கின்ற அரசியல் சார்ந்த முடிவுகள் சரியானதாக இருக்குமாயின், எதற்கும் பயப்படாமல் துணிச்சலுடன் தீர்மானங்களை நிறைவேற்றக்கூடிய முதுகெலும்புள்ள அரசியல்வாதி நாமம் ஹாபிஸ் நசீருக்கு கொடுக்கலாம் என்ற கதை பரவலாகப் பேசப்படுவதனை காணக்கிடைக்கின்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -