எம்.எம்.ஜபீர்-
சவளக்கடை 6ஆம் கிராம லைப் லைன் சமூக சேவைகள் அமைப்பு முதல்முறையாக ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு லைப் லைன் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஏ.எல்.பைசாத் தலைமையில் நேற்று (23) வியாழக்கிழமை 6ஆம் கிராம பிலால் ஜூம்மா பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரும் எதிர்கட்சி தலைவருமான எம்.ஜ.தாஜப்தீன், நாவிதன்வெளி பிரதேச ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.சீ.நிஸார், பிலால் ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.அபூபக்கர், அமைப்புகளின் பிரதிநிகள், வர்தகர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், விளையாட்டுக் கழக பிரநிதிகள், கிராம அபிவிருத்தி சங்க பிரநிதிகள், என பலரும் கலந்;துகொண்டனர்.
இதன்போது ரமழான் சிறப்பு மற்றும் சமூக சேவையும் இஸ்லாமிய கண்ணோட்டம் எனும் தலைப்பில் மார்க சொற்பொழிவை மதீனா சர்வேதேச இஸ்லாமிய பல்கழக்கழகத்தின் மாணவன் மௌலவி ஏ.வீ.றிப்கான் நிகழ்த்தினர்.
இவ் அமைப்பானது உருவாக்கப்பட்டு இரண்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் வெளிநாட்டில் தொழில் புரிந்துவரும் கிராம புற இளைஞர்கள், சமூக சந்தனையாளர்களினால் இவ் அமைப்புக்கான நிதிகளை வழங்கிவருகின்றமை இவ் அமைப்பின் விசேட அம்சமாகும்.