மருதானையிலிருந்து காலி நோக்கி புறப்பட்ட ரயில் ஒன்றில் ஏற முற்பட்ட நபரொருவர் தவறி விழுந்தமையால் உடல் பாகங்கள் இரண்டாக சிதைவடைந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த நபர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து ரயில் புறப்படுவதற்கு தயாரான சந்தர்ப்பத்தில் குறித்த நபர் அவசரமாக ஏற முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.