அரச தொழிலை விட தனியார் துறைகளுக்கு செல்வதே சிறந்தது - மரிக்கார்

லங்கையின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வாக தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை அதிகரிப்பது சிறந்ததது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை நேற்றைய தினம் வழங்கி வைத்த நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் எமது நாட்டின் கல்வியின் மூலம் தான் சமூகத்தில் முன்னேற முடிகின்றது. அதனால் காலத்துக்கு ஏற்றவகையில் கல்வி உலகில் நாமும் மாறவேண்டும்.

நமது சமூகத்தில் வேலையில்லா திண்டாண்டம் அதிகரித்துள்ளது. இதனை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் கைத்தொழிற்துறையை முன்னேற்றும் போது, தனியார்துறை அதை பிரயோசனப்படுத்தி விடுவதாகவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் தற்போது வேகமாக விரிவடைந்து வரும் துறையாக தனியார் துறை விளங்குகின்றது. எனவே தனியார் துறைக்கு ஏற்றவாறு தொழில் பயிற்சிகளை வழங்க வேண்டியுள்ளது. அதற்காக எமது கல்வி திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.

எம்மில் பலருக்கு அரச துறையில் தான் வேலைவாய்ப்பு வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கின்றார்கள். காரணம் அரசாங்க தொழிலில் சம்பளம் அதிகம் எனக் கூறுகிறார்கள்.

ஆனால் இன்று அரச தொழிலை விட தனியார் நிறுவனங்களே அதிக சம்பளம், பதவி உயர்வு அதிகப்படியான கொடுப்பனவுகள் என்பவற்றை வழங்குவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று உலகில் அதிகம் முன்னேறிச் செல்லும் துறையாக இந்த தனியார் துறைகள் விளங்குகின்றன.

எனவே எமது வருங்கால சந்ததியினரும் தனியார் துறையில் தொழில் செய்யும் வகையில் கல்வி கற்க வேண்டும் எனவும், அதற்கு ஏற்றவகையில் எமது கல்வி திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -