தந்தையின் ஊக்குவிப்புத்தான் என்னை வாசிக்கத் தூண்டியது அந்த வாசிப்புத்தான் என்னை ஒரு ஊடகவியலாளனாக உயர்த்தியது

எனது ஊடகப் பணியை கௌரவவித்து மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டம் 2016-05-28ல் ஏற்பாடு செய்த பாராட்டு விழாவையொட்டி எனது மனப் பதிவுகளை சிறிய ஆவணமாக வெளியிடுவதில் பெரும் மனத்திருப்பியடைகின்றேன். 

என் உள்ளத்தில் இருந்து 

அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். 

எனது தந்தையின் ஊக்குவிப்புத்தான் என்னை வாசிக்கத் தூண்டியது அந்த வாசிப்புத்தான் என்னை ஒரு ஊடகவியலாளனாக உயர்த்தியது

எனது ஊடகப் பணியில் நான் மகிழ்சியடைகின்ற பொன்னான நன்னாள் இன்னாள் என்பதில் நான் பெருமிதம் கொள்கின்றேன் எனது மண்ணில் எனக்கு கிடைக்கின்ற இந்த கௌரவம் எனது ஊடகப் பணிக்கான மற்றுமொரு முழு அங்கீகாரமாகவே பார்க்கின்றேன்.ஊடகத்துறையில் நான் உயர்ந்து நிற்பதற்கு ஊடக நிறுவனங்களும், ஊடக நிறுவனங்களின் பிரதானிகளும்,மருதமுனை மண்ணும் மக்களும் துணையாக இருக்கின்றார்கள் என்பதை நன்றியுணர்வோடு பார்க்கின்றேன்.

எனது தந்தை நல்ல ஒரு வாசகராக இருந்தார் அவரின் ஊக்குவிப்புத்தான் என்னை வாசிக்கத்தூண்டியது அந்த வாசிப்புத்தான் என்னை ஒரு ஊடகவியலாளனாக உயர்த்தியது எனது உயர்வின் பின்னணியில் எனது மனைவி ஹவ்லத் இருக்கின்றார் இந்த உயர்வை கண்டு மகிழ எனது தந்தை உயிருடன் இல்லை என்பது எனக்கு பெரும் கவலையாகவே உள்ளது எனது தந்தையும்,தாயும் கூலித்தொழில் செய்தே எங்களை வளர்த்தார்;கள் நல்ல பண்புகளையும்,நல்ல பழக்க வழக்கங்களையும்; கற்றுத்தந்தார்கள்;; ஒரு நல்ல நண்பர்களைப்போல அருகில் இருந்து எங்களை அரவணைத்தார்கள்;. 

ஒன்பது பேர் கொண்ட எங்கள் குடும்பத்தை எனது தந்தை மட்டுமே கூலித் தொழில் செய்து பராமரிக்க வேண்டிய நிலை இருந்தது இதனால் படிப்பை விட்டு விட்டு குடும்பத்தை பராமரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது இதனால் எனது ஒன்பது வயதில் முதன் முதலாக 1966ஆம் ஆண்டு நான் தமன்கடுவ பகுதியில் வேளான்மை வாடிக்கு சமையல் வேலைக்குச் சென்றேன் பின்னர் படிப்படியாக போயிலை வாடியென்றும்,மாட்டு வாடியென்றும்,நெசவுத் தொழில் என்றும்,வியாபாரம் என்றும் எனது கூலித் தொழில்கள்; தொடர்ந்தன.

1979ஆம் ஆண்டு திருமணம் முடித்து கூலிக்கு நெசவுத் தொழிலை செய்து வந்தேன் கூலித் தொழில் செய்த போதிலும் நான் வாசிப்பை கைவிடவில்லை அதன் பலனாக 1988ஆம் ஆண்டு 'அன்னை'என்ற கவிதை ஒன்றை எழுதி எனது எழுத்துப் பணியை ஆரம்பித்தேன் கல்வி கற்க முயவில்லையே என்ற கவலையைப் போக்க 1989ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்கு வெளிவாரியகத்; தோற்றி நான்காம் வகுப்புக் கல்வியை க.பொ.த.சாதாரணதரத்திற்கு உயர்த்தினேன். 

ஓலைக் குடிசையில் இருந்துதான் எனது ஊடகப்பணி ஆரம்பமானது 1988ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை மண்ணெண்ணை விளக்கில் தான் செய்தி எழுதினேன் 2004ஆம் ஆண்டு 6ஆம் மாதம் எனது குடும்பத்துடன் இனறு வரை உறவோடு இருக்கின்ற கலாநிதி எஸ்.எல்.றியாஸ்,எம்.எம்.ஜெஸ்மின் சகோதரர்கள் மின் இணைப்பை பெறுவதற்கு பணம் தந்த உதவினார்கள் ஆரம்பகாலத்தில் எனது ஊடகப்பணியை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை அனுபவித்தேன் ஒரு செய்தியை தபாலில் அனுப்புவதற்கு முத்திரைக்குப் பணம் இல்லாமலும்,அவசர செய்களை பெக்ஸ்சில் அனுப்பவதற்கு பணம் இல்லாமலும் பெரும் கஷ்டப்;;பட்டிருக்கின்றேன்.என்னால் கற்கமுடியாமல் போன நிலை என் பிள்ளளைகளுக்கு வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன் இறைவன் நாட்டப்படி எனது பிள்ளைகள் தங்களுக்கான கல்வியைத் தேடிக்கொண்டார்கள் என்பதில் மனம் மகிழ்கின்றேன்.

ஊடகப்பணியில் என்னை உயர்த்திவிட்டவர்களை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது அந்த வரிiயில் முதன்மையானவர் எழுச்சிக்குரல் பத்திரிகையை வெளியிட்டு வந்த மர்ஹூம் எம்.பி.எம்.அஸ்ஹர் அவர்கள் என்னை யார் என்றும் தெரியாத நிலையிலும் எனது செய்திகளைத் திருத்தி பிரசுரித்து என்னை ஊக்குவித்து உற்சாகப்படுத்தினார் பின்னர் அவர் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக கடமையேற்றபின்னர் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது அதன் பின் அவர் என்னில் அதிக அக்கறை காட்டி ஊடக தர்மத்தோடு கூடிய ஊடகப்பணிக்கு வழிகாட்டினார்.

அதே போன்று 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் அக்கரைபற்றைச் சேர்ந்த இப்றாகிம்சா பௌறுத்தீன்(பௌமி)அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தினமணி பத்திரிகையின் மருதமுனை நிருபருக்கான நியமனக் கடிதமும்,ஊடக அடையாள அட்டையும் முதலில் எனக்குத் தந்தவர் இப்றாகிம்சா பௌறுத்தீன் (பௌமி)அவர்கள்தான் அவரை நன்றி உணர்வோடு நினைவுகூர்கின்றேன்.அதே போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் அவராகவே நீங்கள் தினகரனுக்கு எழுதுங்கள் என்று சொல்லி எனக்கு'மருதமுனை தினகரன் நிருபர்'நியமனத்தைப் பெற்றுத்தந்து அரச பத்திரிகைக்கு என்னை ஊடவியலாளனாக உயர்த்தினார்.

இதன் பிறகு எனது எழுத்துப் பணியை கண்டு சுடர் ஒளி பத்திரிகையின் ஆசிரியராக இருந்த காலம் சென்ற இரத்தின சிங்கம் ஐயா எனக்கும் எனது மகள் ஹரீஷாவுக்கும் நியமனம் தந்து எழுத்துப் பணிக்கு வழிகாட்டி ஊக்குவித்தார்.அதே போன்று வீரகேசரிவார வெளியீடுகளுக்கு ஆசிரியராக இருந்த வி.தேவராஜ் அவர்கள் மெட்ரோ நியூஸ் பத்திரிகைக்கு எழுதுவதற்கு சந்தர்ப்பம் தந்தார் அதே பத்திரிகையில் இணை ஆசிரியராக இருந்த சூரன் ரவிவர்மா அவர்களும் எனக்கு நிறைய சந்தர்பம் தந்து உதவினார் அதே போன்று தற்போது தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருக்கின்ற கே.குணராசா அவர்கள் எனது எழுத்துக்களுக்கு ஊக்கம் தந்து இன்றுவரை உதவுகின்றார்.

தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த தனபாலசிங்கம் ஐயா தினக்குரலில் நான் எழுதுவதற்கு உதவினார் தற்போது நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருக்கின்ற என்.எம்;.அமீன் சேர் அவர்கள் அன்று தொட்டு இன்றுவரை எனது ஊடகப்பணிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றார்.விடி வெள்ளி பத்திரிகைக்கு எழுதவதற்கு அதன் ஆசிரியர் தம்பி எம்.பி.எம்.பைரூஸ் இன்று வரை எனக்கு சந்தர்ப்பம் தந்து கொண்டிருக்கின்றார்.

வீரகேசரி பத்திரிகைக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்தது ஸ்ரீகஜன் அவர்கள் பிரதம ஆசிரியராக பொறுப்பேற்ற பின்னர் எனக்கு சந்தர்ப்பத்தைத் தந்தார் அந்த வகையில் அவருக்கும் எனது நன்றிகள் எப்போதும் உண்டு இறுதியாக வெளிவந்த தமிழ் மிரர் பத்திரிகையிலும் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது அந்த சந்தர்ப்பத்தை தமிழ் மிரர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பி.மதனவாசன் எனக்குத்தந்தார்.

இதே போன்று வாரப்பத்திரிகைக்களுக்கும் அதன் ஆசிரியர்கள் சந்தர்ப்பம் வழங்கி வருகின்றனர் தற்போது தினகரன் ஆசிரிய பீடத்தில் ஆலோசகராக இருக்கின்ற மூத்த ஊடகவியலாளர் எம்.ஏ.எம்.நிலாம் சேர் அவர்கள் மிகவும் நட்புரீதியாக எனது ஊடக முன்னெற்றத்திற்கு அவ்வப்போது நல்ல ஆலோசனைகளை வழங்கி வருகின்றார் உரிமையோடு பேசுவார் குறைகளைக் கண்டால் உரிமையோடு ஏசுவார் நான் சந்தித்த ஊடக உறவுகளில் அவரும் முக்கியமானவர்.அதே போன்று தினகரன் ஆசிரிய பீடத்தில் இருக்கின்ற சுகைப் எம் காசிம்,மற்றும் ஒரு நண்பர் அக்கரைப்பற்று றம்ஸி குத்தூஸ் இவர் 2000மாம் ஆண்டில் தினகரன் நிருபருக்கான நியமனம் கிடைத்து லேக் ஹவுசுக்குச் சென்ற போது புகைப்படங்களை எப்படி வெட்டி ஒட்டி பத்திரிகைக்கு அனுப்பவது என்பதை செய்து காட்டி சொல்லித்தந்தவர் இன்று வரை உறவில் விரிசல் இல்லாமல் உறவை பேணிவருபவர்.

அதே போன்று மூத்த ஊடகவியலாளரும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவருமான மீரா எஸ்.இஸ்ஸதீன் சேர் அவர்கள் எனது ஊடகப்பணிக்கு உருமூட்டிக் கொண்டிருப்பவர் அவர்தான் எனது ஊடகப்பணியை இனங்கண்டு முதன்முதலாக 2003ஆம் ஆண்டு கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து விருதும்,சான்றிதழ் மற்றும் பணமுடிப்பும் வழங்கி கௌரவித்தார்.நான் சுனாமியில் பாதிக்கப்பட்டிருந்த போது என்னைத் தேடிவந்து பண உதவி செய்து அவர் பாவித்துக் கொண்டிந்த கமறாவையும் தந்து உதவியவர் குடும்ப உறவை இன்றுவரை பேணிவருகின்றவர்.

நான் ஊடகப்பணில் இணைந்தது முதல் இன்றுவரை என்னோடு நல்லுறவை பேணிவருகின்றவர் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் மூத்த ஊடவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் சேர் அவர்கள் எந்த விடைய மாக இருந்தாலும் என்னோடு நேரடியாப்பேசி தீர்வுகான்கிறவர்.மூத்த ஊடவியலாளர்கள் வரிசையில் மச்சான் எம்.எல்.எம்.ஜமால்தீன் அவர்கள் அன்று தொடக்கம் இன்று வரை என்னோடு எந்தவித மனக்கசப்பும் இல்லாமல் உறவைப் பேணிவருகின்றவர் ஊடகப்பணி தொடர்பாக எங்கு செல்வதாக இருந்தாலும் எனது வீட்டுக்கு வந்து என்னையும் கூட்டிக்கொண்டு செல்கின்ற நல்ல நண்பன். 

என்னுடன் மிகனவும் நெருக்கமான உறவைப் பேணிவருகின்ற ஊடக நண்பர்கள் அம்பாறை ரவீன்திர மெதகெதர,வசந்த சந்திரபால,அக்கரைப்பற்று எம்.ஏ.பகுறுதீன், அட்டாளைச்சேனை ஐ.எல்;.எம்.றிஸான், நிந்தவூர் றபீக் பிர்தௌஸ், எம்.சஹாப்தீன், காரைதீவு வி.ரி.சகாதேவராஜா, சாய்ந்தமருது அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.எம்.சம்சுதீன், கல்முனை எம்.எம்.ஜெஸ்மின்,கலாநிதி எஸ்.எல்.றியாஸ்,கலாநிதி எஸ்.எல்.ஏ.அஸீஸ், நற்பிட்டிமுனை யூ.எம்.இஸ்ஹாக்,பாண்டிருப்பு செ.துஜியந்தன், மருதமுனை பஷிர் அப்துல் கையூம்,எம்.ஐ.எம்.ஆரிப்,நழீம் எம்.பதுறுத்தீன், ஏ.எச்.எம்.பூமுதீன், ஜெஸ்மி எம் மூஸா,சுகைல் ஜமால்தீன் துறைநீலாவணை எஸ்.பேரின்பராஜா, காத்தான்குடி எஸ்.எம்.நூர்தீன்,முஸ்தபா மௌலவி மட்டக்களப்பு ஆர்.உதயகுமார் பி.பி.சி (இவர்தான் சுனாமிக்குப் பின் முதலில் எனக்கு பணம் தந்து உதவியவர்;),பி.ரி.லத்தீப்,ஏறாவூர் எம்.ஜீ.அப்துல் நாஸர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் வளர்ந்து வரும் இளம் ஊடகவியலாளர்கள் பலர் என்னை கௌரவப்படுத்தி என்னோடு நல்லுறவைப் பேணிவருகின்றனர். ஊடகத்துறைக்கு அப்பால் பலர் எனது முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

இன்னும் இருவர் இருக்கின்றார்கள் இவர்கள் சம்மாந்துறையைச் சேர்ந்தவர்கள் ஒருவர் தற்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இருக்கின்ற சகோதரர் ஐ.எல்.எம்.மாஹிர் இவருக்கும் எனக்கும் இடையிலான உறவு நீண்ட காலமாக இருந்த வருகின்றது சுனாமி அனர்த்தம் நடந்து முடிந்து சில தினங்களின் பின்னர் ஒரு காலைப் பொழுதில் என்வீட்டுச் சந்தியில் நான் நின்று கொண்டிந்த போது சவூஅரேபிய பிரதி நிதிகளோடு வந்த மாஹிர் அவர்கள் என்னைக் கண்டதும் ஒரு தொகை பணத்தை எனது சேட் பொக்கட்டுக்குள் திணித்து விட்டுச் சென்றார்.அது மாத்திரமன்றி கொழும்புக்குச் சென்றபின் உடனடியாக ஒரு டிஜிடல் கமறா ஒன்றை வாங்கி மருதமுனையைச் சேர்ந்த அவரது நண்பர் எம்.அமீன் ஆசிரியரிடம் அனுப்பி எனக்குக் கிடைக்கச் செய்தார் எந்தவித பிரதிபலனையும் என்னிடம் எதிர்பாராமல் அவர் எனக்குச் செய்த பல உதவிகளை என் இதயத்தில் வைத்திருக்கின்றேன்.

மற்றவர் இன்றைய பேராசிரியர் சகோதரர் றமீஸ் அப்துல்லா அவர்கள் நான் ஊடகப்பணியை ஆரம்பித்த காலந்தோடு எங்கள் உறவும் ஆரம்பித்தது இன்றுவரைஅந்த உறவு நீடித்து எனது மக்கள்,மருமக்கள் வரை விரிந்திருக்கின்றது சுனாமியின் பின்னர் நான் தற்காலிகமாக இருந்த வீட்டைக் கண்டுபிடித்து உதவியவர் இப்போது ஒவ்வொருநாளும் எனக்கும் அவருக்குமான தொலைபேசி உரையாடல் தொடர்கின்றது நல்ல மனிதர் படிப்பு,பட்டம்,பதவிகளுக்கு அப்பால் படிப்பும் பட்டமும் இல்லாத என்னோடு உறவை பேணிவருகின்றவர்.

எனது மருதமுனை மண்ணில் எனக்கு எதிரிகள் யாரும் இல்லை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என்னை மதித்து மரியாதை செய்து கண்ணியப் படுத்தி கௌரவம் தருகின்றார்கள் மருதமுனை மண்ணில் எல்லோரும் எனது உறவுகள்தான் அவர்களில் சிலரை சுருக்கமாக குறிப்பிட விரும்புகின்றேன் எனது குடும்பத்துடன் நெருக்கமான உறவோட இருப்பவர் வை.எல்.அன்சார் 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் நான் நெசவு செய்து கொண்டு மிகவும் கஷ்டத்தை எதிர்நோக்கிய காலகட்டம் அது அப்போது அவர் அக்பர் பள்ளிவாசல் கட்டத்தில் கடையொன்றை வைத்திருந்தார் எனது கஷ்டத்தை உணர்ந்து அவர் வைத்திருந்த கடையையும் அவர் ஓடித்தீரிந்த சைக்கிளையும் அப்படியே தந்து விட்டு வெளியெறினார் அன்று அந்தக்கடையில் இருந்த சாமான்கள் மற்றம் தளபாடங்கள் சைக்கிள் என்பவற்றின் பெறுமதியை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு தேவையில்லை எல்லாம் உங்களுக்குத்தான் என்று சொல்லிவிட்டு கல்லாப்பெட்டிக்குள் இருந்த காலைக் கூட எடுக்காமல் கடையை விட்டு வெளியேறினார் பெரும் தன்மையோடு அவரின் பெருந்தன்மை அவ்வப்போது எனக்கு இன்றுவரை உதவிக்கொண்டுதான் இருக்கின்றது அவர் எப்போதுமே என்னிலும் எனது பிள்ளைகளிலும் இருப்பார்.

சுனாமிக்குப் பின்னரான சில விடையங்களை நினைத்துப் பார்க்க வேண்யிருக்கின்றது இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான சிங்கள சகோதரர் சுனந்த தேசப்பிரிய எனக்கு 50ஆயிரம் ரூபா பெறுமதியான கமறாவையும்,பத்தாயிரம் ரூபா பெறுமதியான போனும் எனக்குப் பெற்றுத் தந்தார்.அதன் பின்னர் எஹெட் நிறுவனத்தின் ஊடாக மேலதிகமாக வீடு ஒன்றை கட்ட வேண்டி அவசியம் இருந்தது. 

மருதமுனை 1ஆம் பிரிவில் கிராம உத்தியோகத்தராக இருந்த என்.எம்.இஸ்மாயில்(கம்தூன் ஜி.எஸ்)அவர்கள் திருமணம் முடித்து மருதமுனை 1ஆம் பிரிவில் குடியேறியதில் இருந்து அவருக்கும் எனக்குமான உறவு ஆரம்பமாகியது அன்றில் இருந்து இன்று வரை எங்கள் உறவு தொடர்கிறது அவரை என் மூத்த சகோதரனாகவே நான் பார்க்கின்றேன் எனது பிள்ளளைகளும் அவரை ஜி.எஸ்.பெரியப்பா என்றுதான் சொல்வார்கள் அவரிடம் சென்று வீட ஒன்றைக் கட்ட வேண்டிய அவசியம் பற்றிச் சொன்னேன் அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் செய்வோம் என்று சொன்னார்.

அப்போது கல்முனை பிரதேச செயலாளராக இருந்து 2006ஆம் ஆண்டுக்கான பிரதேச சாகித்திய விருது தந்து என்னை கௌரவித்த தற்போதய கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ஏ.எச்.எம்.அன்ஸார் சேர் அவர்கள் சின்ன வயதில் இருந்தே என்னோடு உறவாக இருந்து வருபவர் அவர்களைச் சந்தித்து விடையத்தைச் சொன்னேன் செய்வோம் என்று சொன்னார் அதற்கான ஆவணங்களைத் தயார் செய்த போதும் பொலிஸ் முறைப்பாடு தேவைப் பட்டது அப்போது கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக இருந்த எப்போதும் என்னில் ஒரு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த எச்.எல்.ஜமால்தீன் சேர் அவர்களிடம் தொடர்பு கொண்டு பொலிஸ் முறைப்பாடு வேண்டும் என்று சொன்னேன் உடனடியாக மகளையும்,மருமகனையும் அனுப்புங்கள் என்றார் உடனடியாகவே பொலிஸ் முறைப்பாட்டையும் வழங்கினார்.

பின்னர் ஆவணங்களை ஒன்று சேர்த்து எஹெட் நிறுவனத்தில் பணிப்பாளராக இருந்த எனக்கு நன்கு அறிமுகமான செல்வஸ்டர் சிறீதரன் அவர்கள் மூலமாக அனைவரின் உதவியோடு வீடு ஒன்றைப் பெற்றுக் கொண்டேன் அந்த விடையத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் இந்த சந்தர்ப்பத்திலே நன்றியுடன் நினைவு கூர்ந்து கொள்வதில் மனம் நிறைவடைகின்றேன். 

மருதமுனை மக்கள் அனைவருமே என்னை நேசிக்கின்றார் இவர்களில் எனது ஊடகப்பணியை ஊக்குவிக்கின்ற சிலரை நான் குறிப்பிட்டாக வேண்டும் எப்போதும் என்னோடு நெருக்கமாக இருந்த நிறைய எனக்கு உதவியவர் மர்ஹூம் ஐ.ஏ.ஹமீட் சேர்;,எனது பிரச்சினைகளை விசாரித்து அடிக்கடி உதவுகின்ற தம்பி எம்.ஐ.ஏ.பரீட்,அடிக்கடி என் வீட்டுக்கு வந்து எனது கஷ்டங்களை அறிந்து உதவிகளைச் செய்கின்றவர் மருமகன் இஸட்,ஏ.எச்.றஹ்மான், நிருவாக சேவை அதிகாரியாக இருக்கின்ற மருமகன் எம்.சி. அன்சார் நான் கஸ்டப்படுகின்றபோது அதிக உதவிகளைச் செய்தவர். அவரை ஒரு போதும் என்னால் மறக்க முடியாது. கல்முனை பிரதேச செயலாளராக இருந்த போது எனது ஊடகப் பணியை கௌரவித்து இரண்டு முறை எனக்கு விருது தந்து கௌரவித்தவர் நண்பர் எம்.எம்.நௌபல்; ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

எப்போதும் என்னுடன் இருந்து எனது நிலைமைகளை ஆராய்ந்து உதவுகின்ற நண்பர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்;,எனது மைதுனர் எம்.எம்.உதுமாலெப்பை,2007ஆம் ஆண்டு எனக்கு விருது தந்து கௌரவித்த எழுத்தாளர் இஸ்மாயில் பி மாரிப்,நண்பர் அஷ்செய்க் எம்.ஐ.ஹூசைனுதீன்;, சட்டத்தரணி ஏ.எம்.பதுறுத்தீன், சகோதரர் அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன், சகோதரர் அஷ்செய்க் எப்.எம்.அகமதுல் அன்ஸார் மௌலானர்,தம்பி பாவா ஜஹ்பர.;தம்பி எம்.ஐ.எம்.வலீத்,மருமகன் எம்.எச்.தாஜூதீன்,என்னுடைய பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் உடனடியாக வந்து தீர்த்துவைக்கின்ற என் மைத்துனர் எம்.எச்.அகமட் அஜ்மீர்,என்னில் அதிக அன்பு வைத்திருக்கின்ற எனது சிறுவயது நண்பர்; எம்.ஐ.அலிபுத்தீன் ஆகியோர் எப்போதும் என்னில் இருப்பவர்கள்.

நான் ஓலைக் குடிசையில் வாழும் போது என்னோடும் என் இலக்கியத் தோடும் இணைந்த இலக்கியவதிகள்; மருதூர் வாணர்,மருதூர் கொத்தன்,மருதூர் பாரி,மருதமுனை ஹஸன்,புன்னகை வேந்தன்,எம்.எச்.ஏ.கரீம்,அலியார் எம்.தமிம், மருதமனாளன்; றபீக்,சத்தார் எம்.அஸாத்,சத்தார் எம்.பிர்தௌஸ்(கலாநிதி)றகுமான் ஏ ஜமீல்,அம்ரிதாயெயம்.குர்சித்,டீன் கபூர் ,அலறி, அறநிலா, உமாவரதராஜன், துஜியந்தன்,சடாட்சரன் அல்ஜ், ஹக்கீம், ஜீனாராஜ், எம்.எம்.விஜிலி, பெரிய நீலாவணை ஹதியத்,மருதமகன் சமட் ஆகியோரையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைத்துக் கொள்கின்றேன்., 

எனது 28 வருட கால ஊடகப்பணி;க்கு இன்றுதான் எனது மருதமுனை மண்ணின் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது நான் விருதுகள் பெறும்போதும் வேறு பிரதேசங்களில் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,பரிசுகளும் பெறும் போதும் அவை மருதமுனை மண்ணுக்கு கிடைத்த பெருமையாகவே கருதினேன் ஆனால் இன்று எனது மண்ணில்; கிடைத்த இந்த கௌரவத்தை எனக்குக் கிடைத்த கௌரவமாகப் பார்கின்றேன்.

ஊடகத்துறை உயிரைப்பலி கொடுக்கின்ற ஒரு துறையாக இன்று மாறியிருக்கின்றது ஒருவரின் பிழையான பக்கத்தை எழுதினால் ஆள்வைத்து அடிப்பார்கள் அல்லது கொலை செய்வார்கள் அதுவும் முடியாவிட்டால் அவதூறு பேசி அவமானப்படுத்துவார்கள் ஒருவரின் நல்ல பக்கத்தை எழுதினால் நன்றி கூட சொல்லமாட்டார்கள் இதுதான் இன்றைய ஊடகத்துறையின் நிலை.இந்த நிலையில் 28 வருடங்கள் இந்த ஊடகப் பணியை முன்னெடுத்தமை ஒரு சாதனையாகவே நினைக்கின்றேன்.

இன்னும் என் உயிர் உள்ளவரை இந்த எழுத்துப் பணியை விடாமல் தொடர வேண்டும் என்பதே எனது ஆசை மிகவும் கஸ்டத்தோடு முன்னெடுத்த எனது ஊடகப்பணிக்கு உயிரூட்டியவர் எனது மனைவிதான் எனக்குக் கிடைத்திருக்கின்ற விருதுகளுக்கும் பாராட்டுக்களுக்கும் சொந்தக்காறி எனது மனைவிதான் துன்பங்கள் வந்த போதெல்லாம் துவண்டுவிடாமல் நிமிர்ந்து நின்று என்னை உற்சாகப்படுத்தியவள் என் மனைவிதான் எனது பிள்ளைகளும் எனது ஊடக்கப் பணிக்கு துணையாய் நின்றவர்கள் இன்றும் நிற்பவர்கள் அதே போன்று எனது மருமக்களும் என்னோடும் எனது பணியோடும் ஒன்றிப்போனவர்கள் என்னில் இன்னும் நிறைய இருக்கின்றது மரணம் எப்போது வரும் என்று சொல்ல முடியாது அதனால் இந்தக் குறிப்பில் சில விடையங்களைச் சொல்லியிருக்கின்றேன். என்னைப் பற்றி 'சுயம்' என்ற நூலை எழுதிக் கொண்டிருக்கின்றேன் அந்த நூல் வெளிவரும் பொது நிறைய விடையங்களை அறிந்து கொள்ள முடியும் என நினைக்கின்றேன்.

இப்போது எனது கஷ்டங்கள் குறைந்து சந்தோஷமாக இருக்கின்றேன் எனது மக்களும் மருமக்களும் என்னையும் எனது மனைவியையும் நன்றாகப் பராமரிக்கின்றார்கள் அதனால் இப்போது எனது ஊடகப்பணிக்கு முழு சுதந்திரம் கிடைத்திருக்கின்றது முடிந்தவரை எனது பணியைத் தொடரமுடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

பெரிய பெரிய அமைப்புக்கள் இருந்த போதிலும் என்னை கௌரவிக்க வேண்டும் என்ற பெரும் மனதோடு செயற்பட்ட மருதமுனை புதுப்பனைவு இலக்கிய வட்டத்தின் செயற்பாட்டாளர்களான மருதமுனை ஹஸன்,அம்ரிதாயெயம்,அலறி,டீன் கபூர், றகுமான் ஏ ஜமீல்,குர்சித்,காமிஸ் கலீஸ் ஆகியோருக்கும் இந்த நிகழ்வுடன் தொடர்புபட்டவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். 

அத்தோடு இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எனக்கு நினைவுச் சின்னங்களையும்,பரிசுப் பொருட்களையும்,பண அன்பளிப்புக்ளையும் தந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தவர்களுக்கும்,எனக்காக வந்த விஷேட உரையாற்றிய பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,கொழும்பில் இருந்து வந்து கலந்து கொண்டு உரையாற்றி என்னை கௌரவித்த விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைரூஸ் ஆகியோருக்கு விஷேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் 

மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட ஊடக நண்பர்களுக்கும்,நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் என் வீட்டுக்கு வந்து அன்பளிப்புக்களை வழங்கி கௌரவித்தவர்களுக்கும்,எனது நிகழ்வு பற்றிய செய்திகளை பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும், முகநூல்களிலும் பிரசுரித்த நண்பர் யு.எம்.இஸ்ஹாக், அஸ்லம். எஸ் மௌலானா,ஜெஸ்மி எம் மூஸா மற்றும் ஊடக நிறுவனங்களுக்கும் நிகழ்வை நேரடி ஒலிபரப்புச் செய்த பிறை எப்பத்திற்கும் அதன் கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அத்துடன் நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய ஊடகவியலாளர் மருமகன் ஏ.எல்.எம்.சினாஸ் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

என்மீது நல்லெண்ணம் கொண்டு; முகநூலில் வாழ்த்துக்கவி பாடிய எழுகவி ஜலீல் அவர்களுக்கம்,முகநூலில் வாழ்த்துக்களைத் தெரிவித்த நண்பர்களுக்கும் என் உளம் கனிந்த நன்றிகள். 

எனது மனதில் ஞாபகம் இருந்த விடையங்களை அடையாளப்படுத்தியிருக்கின்றேன் விடுபட்ட விடையங்கள் ஞாபகத்திற்கு வரும்போது இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் அவை ஞாபகப்படுத்தப்படும் என்ற செய்தியுடன் இந்தப்பதிவில் இருந்து விடைபெறுகின்றேன்.

நன்றி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -