தனது ஆட்சிக் காலத்தில், கொஸ்கம – சாலாவ இராணுவ முகாமை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் நலம் விசாரிக்க வெலிகடை சிறைசாலைக்கு விஜயம் செய்திருந்த போது ஊடகவியலாளர்கள் கொஸ்கம இராணுவ முகாம் விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் இது தேசிய பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல், ஆகவே உடனடியாக என்னால் கருத்துத் கூற முடியாது. அகவே சம்பவம் தொடர்பில் அரசு வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும். என்ன நடந்தது என்பது குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.