மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு முழுமையாக நீக்கம்...!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த இராணுவத்தினர் 50 பேரும் இன்று முழுமையாக நீக்கப்படவுள்ளனர்.

மேலும், குறித்த 50 பேரையும் இரு கட்டங்களாக நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்று 25 பேரையும் நாளை 25 பேரையும் நீக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவின் பாதுகாப்புக்கென வழங்கபட்டிருந்த இராணுவத்தினரில் 100 பேரில் 50 பேர் கடந்த மே மாதம் 2 ஆம் திகதி நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனையவர்கள் 50 பேரையும் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நீக்குவதற்கு உத்தரவிட்டபோதிலும், கடும் எதிர்ப்பு மற்றும் பல கோரிக்கைகளுக்கு மத்தியில் குறித்த உத்தரவு இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையிலேயே, குறித்த 50 இராணுவத்தினரை இன்றும் நாளையும் இரு கட்டங்களாக நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவத்தில் பிரிகேடியர் ஒருவரும் லெப்டினன் கேணல் ஒருவரும் மற்றும் பல உயர் அதிகாரிகளும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்படுவதை அடுத்து, பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக விஷேட பயிற்சி பெற்ற பொலிஸ் விஷேட அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அடங்கிய 50 பேரை நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -