ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இரண்டு தீயவர்கள் இருப்பதாக பெங்கமுவ நாலக்க தேரர்தெரிவித்துள்ளார். நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நாலக்க தேரர் இதனைதெரிவித்துள்ளார்.
இதில் ஒருவர் பெரு நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலிசம்பிக்க ரணவக்க மற்றும் ரத்தன தேரர் என நாலக்க தேரர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு எதிராக யார் எதிர்த்து நின்றாலும் அவர்களை கொல்வேன் என சம்பிக்க ரணவக்கதுறவி ஒருவரிடம் கூறியுள்ளார் என நாலக்க தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த துறவியிடம் நாலக்க தேரர் விசாரணைகளை மேற்கொண்டபோது, தன்னுடன் இருப்பவர்கள் கட்சி மாறினார்கள் என்றால் முதலில் அவர்களைகொல்வேன் என சம்பிக்க கூறியுள்ளதாக துறவிதெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் கைது ஜனநாயகத்திற்கு ஒரு பலத்த அடிஎன நாலக்க தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
TW