தாஜகான்-
பொத்துவில் கவிஞர் மஜித் அவர்களின் யாரோ ஒருத்தியின் டையரி குறுங்காவியம் அறிமுக நிகழ்வு 2016.06.05 பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது.
இந்நிகழ்வு பொத்துவில் உபவலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர் கே.ஹம்சா அவர்களின் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கவிஞர் மஜித் பற்றிய குறிப்பாடலை பொத்துவில் தாஜகான் அவர்கள் நிகழ்த்தினார்.
ஏராளமான கல்விமான்கள், கவிஞர்கள் கலந்து கொண்டு மஜித் அவர்களின் கரங்களால் நூல்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
கவிஞர் மஜித் அவர்கள் ஈழத்து இலக்கியத் தளத்தில் பின்நவீன இலக்கியம்சார் படைப்பாளன் என்பது தெளிவான உண்மையாகும். ஏற்கனவே
ஏறுவெயில் கவிதைகள்
வாழ்வின் மீதான எளிய பாடல்கள்
சுள்ளிக்காடும் செம்பொடையனும்
ஒரு இலையின் மரணம் கவிதைகள்
மஜித் கவிதைகள்
கதையாண்டி குறுநாவல்
மஜித் உயிர் பிழியும் கவிதைகள்
முள்ளிவாய்க்காலும் நிலம் பெறுக்கெடுத்த சவக்குளிகள்
இத்தகைய கவிஞர் மஜித் அவர்கள் நோயினால் பாதிப்படைந்துள்ள நிலையிலும் தொடர்ந்து தான் சொல்லச் சொல்ல தன் மனைவியின் உதவியுடன் நூலாக்கம் செய்வது என்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.