அஹமட் இர்ஷாட்-
நினைவுகளால் மீட்டலாம் நிஜத்தில் வருமா? இனியும் இப்படி ஒரு தலைமைத்துவம் எம் சமூகத்துக்கு கிடைக்குமா? முகவரி இல்லாத சமூகத்துக்கு முகவரியை தேடித் தந்த மா மனிதர் அஷ்ரப். இன்று அவரின் நிழலிலே பிரிந்து எத்தனை பேர் தலைவர்களாக இனங் காட்டிக் கொண்டு சுக போகம் அனுபவிக்கின்றார்கள் என்பது ஒரு விளையாட்டு என்றால்.? இருக்கின்ற தலைமையும் அஷ்ரப்பின் நிழலிலே தன்னை ஒருகட்சியின் தலைவனாக்கி அதனை தனது ஆயுதமாய் தூக்கி பிடித்திருப்பதுதான் அரசியல் விளையாட்டு.
கிழக்கில் இருந்து் தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வரவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை!
இது கிழக்கு மாகாணத்தின் காங்கிரஸும் இல்லை, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை என்பது ஆழுமை, சாணக்கியம் சகிப்புத்தன்மை, பக்குவம், மொழிவளம், பேச்சாற்றல் ,நேர்மை, இந்த திறமை, யாரிடம் உள்ளதோ, யாரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையாக வரலாம், அது பதுளையில் ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்தாலும் அதை போராளிகள் ஆதரிப்பார்கள்.
அதனால் நான் தான் ஆயுட்கால தலைமை என்பதை கடந்த இருபது வருடங்களை பிறட்டி பார்க்கின்ற பொழுது கட்சி உறுவாக்கபட்ட கிழக்கு மாகாண மண் கண்ணீர் வடிக்க முடியாத அழுகையை தன்னுல் புதைத்துகொண்டிப்பதானது வெளிச்சத்திற்கு வந்த கதையாகி விட்டது.
தியாகத்தால் உறுவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரசினை வழி நடாத்தும் தகுந்த திறமையும் தலைமையிடம் நிறைவாகவே உண்டு. தலைமையின் கண்ணுக்கு பிறகு தலைமை பதவியை கையில் எடுக்க எந்த ஊராக இருந்தாலும் அதை போராலிகள் ஆதரிப்பார்கள் என்பது வரலாற்று நிதர்சனம்.
கிழக்கில் உதயமாகப்பட்ட கட்சிக்கு ஏன் மீண்டும் கிழக்கிலிருந்தே புதிய தலைமை உறுவாக்கப்பட வேண்டும் என்ற விழிர்ப்புணர்ச்சி எகிப்திய முர்சியின் சகோதரத்துவ ஆதரவாளர்களிடத்தில் உறுவானதை போன்று உறுவாக்கம் பெறும் காலமும் மிக தொலைவில் இல்லை.
ஏன் என்றால் உலக வரலாற்றில் ஓர் இயகத்தின் தலைமையோ அல்லது ஓர் அரசியல் கட்சியின் தலைமையோ இருபது வருடங்களுக்கு மேல் தனது அதிகாரத்தினை தக்கவைத்திருந்தமை மிக அரிதாகவே இருக்கின்றது. இதற்கு வேலுப்பிள்ளை பிரபாகரன், சதாம் ஹுசைன் போன்றவர்கள் மிகச் சிறந்த உதாரணமாகும்.
இன்னும் பல உலக தலைவர்கள் உதரணத்திற்காக இருக்கின்றார்கள். SLMC யின் தலைமைக்கும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலோடு தனது கைக்கு அதிகாரம் கிடைத்து இருபது வருடங்கள் பூர்த்தியாகின்றது..
எங்கு எதை எவ்வாறு சுட்டிக்காட்டினாலும் பிரதேச வாதம் பேசி குண்டு சட்டிக்குள் குதிறை ஓட்டுபவர்களை அழித்து விட முடியாது. அது உலகம் அழியும் வரைக்கும் முடிவிலியாகவே இருக்கும். SLMC யின் தலைமைக்கு ஏற்பட்டிருக்கும் அல்லது இன்னும் ஏற்பட போகின்ற எதிர் தாக்குதல்கள் அனைத்தும் பிரதேச வாதத்திற்கு அப்பாற்பட்டு உலக அரசியல் சக்கரம் உணர்த்துகின்ற உண்மை தத்துவத்தின் ஆரம்ப படியாக அல்லது சில வேலைகளில் இறுதிப்படியாக கூட இருக்கலாம் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாக இருக்கின்றது.
எது எவ்வாறு நடந்தாலும் முஸ்லிம் காங்கிரசின் உண்மையான போராலிகளின் உயிர் மூச்சு இருக்கும் வரைக்கும் கிழக்கிலிருந்து முஸ்லிம் காங்கிரசினை அழித்து விட முடியாது என்பது என்றோ பெரும் தலைவர் பெரும் தியாகங்களுக்கு மத்தியில் எவறாலும் அழிக்க முடியாத படி அல்லாஹ்வை முன்னிறுத்தி பதிந்து விட்டு சென்ற விடயமாகும்.