அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட காட்டுப்பகுதிக்குள் தேன் எடுக்கச்சென்ற 22 வயதுடையவர் மரத்திலிருந்து விழுந்து இடுப்புடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (08) பிற்பகல் 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறித்த நபர் ஒரு பிள்ளையின் தந்தையான கட்டைப்பறிச்சான்-சந்தனவெட்டக்கல் பகுதியைச்சேர்ந்த கே.சுதாகரன் (22 வயது) எனவும் தெரியவருகின்றது.
தேன் எடுப்பதாற்காக காட்டுக்குள் சென்று மரங்களை சோதனையிட்ட வேளை தவறுதலாக விழுந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
மரத்திலிருந்து விழுந்த நபரின் இடுப்பு பகுதியில் எலும்பு முறிந்துள்ளதாகவும் எக்ஸ்ரே மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.